#MyStreetMyProtest எனும் டேகில் பெங்களூரு மக்கள் போராட்டம்!

கத்துவா, உன்னா சம்பவங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் பெங்களூரு மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்!

Last Updated : Apr 15, 2018, 02:58 PM IST
#MyStreetMyProtest எனும் டேகில் பெங்களூரு மக்கள் போராட்டம்!  title=

கத்துவா, உன்னா சம்பவங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் பெங்களூரு மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்!

நாடுமுழுவதிலும் கத்துவா, உன்னா பகுதி பாலியல் வழக்கும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது பெங்களூரு மக்கள் சமூக வலைதள உதவியோடு நூதன போராட்டத்தினை கையில் எடுத்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஒருவரை 8 பேர் கொண்ட கும்பள் பாலியல் வன்கொடுமை ஆளாக்கி கொலை செய்துள்ளனர். அதேப்போல் உபி-யின் உன்னா நகரில் 18 வயதுக்குட்பட்ட பெண்ணை பாஜக MLA பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதிலும் பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கர்நாடகாவின் பெங்களூருவை சேர்ந்த மக்கள், சமூக வலைதள உதவியோடு #MyStreetMyProtest எனும் ஹாஸ் டேகில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

#MyStreetMyProtest என்றால்?...

  • தன் வீதியில் இருக்கும் அடுத்த வீட்டிற்கு சென்று அவரையும் போராட்டத்திற்கு அழைக்க வேண்டும்.
  • கத்துவா, உன்னா சம்பவங்களை குறித்து அவர்களிடன் தெரிவித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
  • போராட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சரியாக பிற்பகல் 3.00 மணியளவில் கூட வேண்டும்.
  • முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபடவேண்டும்.
  • இந்த நிகழ்வுகளை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ இணையத்தில் #MyStreetMyProtest என்ற ஹாஸ் டேகுடன் பதிவேற்ற வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளித்து வரும் நிலையில் தங்களது எதிர்ப்பினை தெரிவிக்க பெங்களூரு மக்கள் சமூக வலைதளத்தினை கையில் எடுத்துள்ளது அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

Trending News