காங்கிரஸ் கட்சி மீது மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா அதிருப்தி என தகவல்!

காங்கிரஸ் மீது இருந்த அதிருப்தியை ட்விட்டரில் வெளிப்படுத்திய மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா!

Last Updated : Nov 25, 2019, 01:32 PM IST
காங்கிரஸ் கட்சி மீது மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா அதிருப்தி என தகவல்!  title=

காங்கிரஸ் மீது இருந்த அதிருப்தியை ட்விட்டரில் வெளிப்படுத்திய மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா!

மகாராஷ்டிராவில் நடைபெற்ற அதிரடி அரசியல் திருப்பங்களுக்கு நடுவே அடுத்ததாக மத்திய பிரதேசத்திலும் பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்தியபிரதேச சட்டசபைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில், 230 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு தற்போது 115 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 107 உறுப்பினர்களும் உள்ளனர். ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், சமாஜ்வாடி மற்றும் சுயேட்சைகள் அரசுக்கு ஆதரவாக உள்ளனர்.

கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்கும் முன்னரே மாநிலத்தின் முக்கிய தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவை முதல்வராக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். எனினும், சீனியர் என்ற அடிப்படையில் காங்கிரஸ் தலைமை கமல்நாத்தை முதல்வராக்கியது.

இதையடுத்து, சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் குணா தொகுதியில் போட்டியிட்ட ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவிடம் தோல்விய்டைந்தார். இதனை அடுத்து, கட்சி நடவடிக்கைகளில் இருந்து அவர் சற்றே ஒதுங்கியிருந்தார். மாநில தலைவராக அவர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அடிபட்ட நிலையில், அதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா தொடர்ந்து அதிருப்தி இருப்பதாக கூறப்பட்டது. இப்படியான சூழ்நிலையில் ஜோதிராதித்யா சிந்தியா திடீரென தனது ட்விட்டர் கணக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்த வரியை நீக்கியுள்ளார்.

இது குறித்து, அவர் டுவிட்டர் கணக்கில், பொது சேவையாளர் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்று மட்டுமே எழுதியுள்ளார். இதனால் மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சிக்குள், அதிருப்தி பெரிய அளவில் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில், மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் வெளியேறினார். 

இந்நிலையில், ட்விட்டர் பயோவில் இருந்து காங்கிரஸ் பெயரை நீக்கியது குறித்து ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்;  "ஒரு மாதத்திற்கு முன்னர் ட்விட்டர் பயோ வை மாற்றினேன். மக்களின் அறிவுறுத்தலை ஆற்று எனது பயோவை மேலும் சுருக்கினேன். இது குறித்த வதந்திகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை; ஒரு மாதத்திற்கு முன்னர் ட்விட்டர் பயோ வை மாற்றினேன். மக்களின் அறிவுறுத்தலை ஆற்று எனது பயோவை மேலும் சுருக்கினேன். இது குறித்த வதந்திகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என அவர் தெரிவித்துள்ளார். 

 

Trending News