34 லட்சம் பயனாளிகளுக்கு 3628 கோடி ரூபாய் கடன் வழங்கிய பிரதமர் ஸ்வநிதி திட்டம்

சிறு வியாபாரிகள் மற்றும் வணிகர்களுக்கு மூலதனத்துக்காக கடன் வழங்கும் திட்டத்தில் இதுவரை  3628 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 21, 2022, 01:35 PM IST
  • பிரதமர் ஸ்வநிதி திட்டம்
  • 34 லட்சம் பயனாளிகள்
  • இரண்டாண்டில் 3628 கோடி ரூபாய் கடன்
34 லட்சம் பயனாளிகளுக்கு 3628 கோடி ரூபாய் கடன் வழங்கிய பிரதமர் ஸ்வநிதி திட்டம் title=

பிரதமர் ஸ்வநிதி உதவித் திட்டத்தின் கீழ் 34 லட்சம் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். இதுகுறித்து, சிவில் சர்வீசஸ் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், நிதிச் சேவை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா,  இந்தத் திட்டத்தின்கீழ் இதுவாஇ 3628 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி செய்யும் பிரதமர் தெரு வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி திட்டம் (PM Street Vendor’s AtmaNirbhar Nidhi) எனப்படும் பிரதமர் ஸ்வநிதி திட்டம் (PM Svanidhi) செயல்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் ரூ.10,000 வரை கடன் பெறலாம். இது தவிர, முந்தைய கடனைத் திருப்பிச் செலுத்தியவர்களுக்கு இரண்டாவது முறை ரூ.20,000 கிடைக்கும். அந்த கடனையும் திருப்பி செலுத்திவிட்டால் மூன்றாம் முறையாக ரூ.50,000 கடனுதவி பெறலாம்.

மேலும் படிக்க | HDFC Bank வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி: எஃப்டி வட்டி விகிதங்களின் மாற்றம்

இந்த திட்டமானது, கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய பிறகு அதன் தாக்கத்தில் இருந்து சிறு வியாபாரிகளையும், தெருவோர கடை வைத்திருப்பவர்களையும் பாதுகாக்க தொடங்கப்பட்டது. கொரோனா பரவியபோது, அதன் தாக்கம் நோயைப் போலவே உலக மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதித்தது.

வியாபாரம் நொடிந்துபோன வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அவர்களின் முதலீடு வீணானது, சேமிப்புகளும் காற்றில் கற்பூரமாய் கரைந்துவிட்டன.

மக்களின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், வாழ்வாதாரத்தை சீரமைக்கவும், மத்திய அரசு  பிரதமர் தெரு வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதித் திட்டத்தை தொடங்கியது. சிறு வியாபாரிகள் மற்றும் வணிகர்களுக்கு மூலதனத்துக்காக கடன் வழங்கும் இந்தத் திட்டம், 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.

மேலும் படிக்க | Bank Locker: விதிகளில் மாற்றம், தெரிந்துகொள்வது அவசியம்

தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தின் கீழ், கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் மற்றும் வியாபாரிகளுக்கு உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட PM ஸ்வநிதி யோஜனா திட்டத்தில் இதுவரை 3628 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

34 லட்சம் பயனாளிகளுக்கு 3628 கோடி ரூபாய் கடனை வங்கிகள் (Bank Loan) வழங்கியுள்ளதாக, சிவில் சர்வீசஸ் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், நிதிச் சேவை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

திட்டத்தின் பலனை யார் பெறலாம்

சாலையோரங்களில் கை வண்டி வைத்து வியாபாரம் செய்பவர்கள், தெருவில் பொருட்களை விற்பவர்கள், வியாபாரிகள், பழம்-காய்கறி, பெட்டிக் கடை வைத்திருப்பவர்கள், சலவை, சலூன் மற்றும் மிட்டாய்க் கடைகள் வைத்திருப்பவர்கள் பெறலாம்.

 24 மார்ச் 2020 அன்று அல்லது அதற்கு முன்னதாக தங்கள் விற்பனையை தொடங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | உங்கள் மொழியில் ஆதார் அட்டையை புதுப்பிக்கலாம், வழிமுறைகள் இதோ 

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதை ஆதரித்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களின் செயலாளர் மனோஜ் ஜோஷி, இதனால் பண பரிவர்த்தனை மீதான சார்பு குறைந்து, தொழில்களுக்கு அதிக ஊக்கம் கிடைக்கும் என்றார்.

பிஎம்-ஸ்வநிதி போன்ற சிறிய அளவிலான கடன்களை வழங்க வங்கிகள் நடவடிக்கை மேலும் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஓராண்டுக்கு பிணையமில்லா கடன்
பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டத்தின் கீழ், நகர்ப்புறங்களில் உள்ள தெருவோர வியாபாரிகளுக்கு 1 வருடத்திற்கு ரூ.10000 வரை பிணையில்லாமல் கடன் வழங்குவதற்கான ஏற்பாடு உள்ளது.

கடனுக்காக எந்தவிதமான உத்தரவாதமும் கொடுக்க வேண்டிய அவசியமில்லைஎன்பது இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம். கடனை மாதாந்திர தவணைகளிலும் திருப்பிச் செலுத்தலாம்.

PM ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் பெற்ற கடனை முறையாக திருப்பிச் செலுத்தினால், கடன் பெற்ற்வருக்கு ஆண்டுக்கு 7% வட்டி மானியமும் கிடைக்கும் என்பது இந்தத் திட்டத்தின் கூடுதல் சிறப்பு ஆகும்.

மேலும் படிக்க | 'KGF'- ல நம்ம தினேஷ் கார்த்திக்கா?! - நெட்டிசன்ஸின் வேற லெவல் கண்டுபிடிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News