குழந்தை பராமரிப்பில் ஆண்களுக்கும் பங்கு இருக்கு... அடிச்சு சொன்ன விமான நிலையம்

பெங்களூரு விமான நிலையத்தில் ஆண் பெண் பேதமின்றி குழந்தை பராமரிப்புக்கு உதவும் வகையில் ஒது புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jun 29, 2022, 08:50 PM IST
  • இந்தியாவினுள் இந்த கலாச்சாரத்தை பெங்களூரு தொடங்கி வைத்துள்ளது என்பதில் மாற்று கருத்து கிடையாது.
  • அம்மாக்கள் வேண்டிக்கொண்டதை எப்படியோ தெரிந்துக்கொண்ட பெங்களூரு விமான நிலையம்
குழந்தை பராமரிப்பில் ஆண்களுக்கும் பங்கு இருக்கு... அடிச்சு சொன்ன விமான நிலையம் title=

பெங்களூருவில் சமூக வளர்ச்சி பல்மடங்கு கூடியே காணப்படுகிறது. வேலை, சம்பளம், காலநிலை மாற்றம், உணவு, மேற்கத்திய வாழ்க்கை முறை என அனைத்தும் பெங்களூருவில் குறையின்றி கிடைக்கிறது.

பொதுவாகவே பெங்களூருவிற்கு வேலைக்கு செல்வோர் அங்கிருந்து திரும்ப வரும்போது ஆளே மாறி, புது பொலிவுடன் வருவார்கள். ஏன்என்றால் அங்குள்ள நவீன மன நிலை நம்மையும் மாற்றும் என்றெல்லாம் கூற்றுகள் உள்ளன.

இவ்வாறிருக்க குழந்தை பெற்றவர்கள் பயணத்தின்போது சரிபாதியாக குழந்தையை பராமரிப்பதில் ஈடுபாடு காட்டுவதில்லை. குழந்தை கழிவறைக்கு செல்ல வேண்டும் என்றாலும், டயப்பர்கள் மாற்ற வேண்டும் என்றாலும் பொது வெளிகளில் பெண்களே குழந்தையை கொண்டுச்சென்று சுத்தப்படுத்தி கொண்டு வருகிறார்கள்.

மேலும் படிக்க | மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு தள்ளுபடி - எதனால் ?

இந்த நிலை மாறவேண்டும் என்று பெரும்பாலான அம்மாக்கள் வேண்டிக்கொண்டதை எப்படியோ தெரிந்துக்கொண்ட பெங்களூரு விமான நிலைய நிர்வாகம், ஆண்களின் கழிவறையில் டயப்பர் சேன்ஜிங் ரூம் என்ற ஒன்றை நிறுவியுள்ளது.

இது உலகத்தையே மாற்றி விடாது என்றாலும், இந்தியாவினுள் இந்த கலாச்சாரத்தை பெங்களூரு தொடங்கி வைத்துள்ளது என்பதில் மாற்று கருத்து கிடையாது அல்லவா. 

இன்னும் சில நாட்களில் பிற விமான நிலையங்களிலும், பிற வகை பயண நிலையங்களிலும் கழிவறைகளில் இதுபோன்றவை நிறுவப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பெங்களூருவில் விமானப் பயணம் மேற்கொண்ட வாடிக்கையாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பெங்களூரு விமான நிலையம் குறித்து பாராட்டி பதிவிட்டுள்ளார். அதற்கு பெங்களூரு விமான நிலைய நிர்வாகமும் பதிலளித்துள்ளது.

 

 

மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News