கடந்த 1992–ம் ஆண்டு, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை வழக்கில், அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
அத்தீர்ப்பில் நிலத்தை, மனுதாரர்களான சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா (துறவியர் பேரவை) அமைப்பு, ராம் லல்லா அமைப்பு ஆகிய மூவரும் தங்களிடையே மூன்று பகுதிகளாக பிரித்துக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இத்தீர்பில் உடன்படு இல்லாமல் சம்மந்தப்பட்டவர்கள், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
கடந்த 7 ஆண்டு காலமாக நிலுவையில் இருந்த இந்த மேல்முறையீடுகளை. நீதிபதி தீபக்மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோரை கொண்ட 3 பேர் அமர்வு விசாரிக்கிறது.
இதுதொடர்பான விசாரணை இன்று தொடங்கிய நிலையில் வழக்கை 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் விசாரிக்க வேண்டும் என சன்னி வக்பு வாரியம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Ayodhya dispute: Advocates Kapil Sibal, Rajiv Dhawan along with other petitioner counsels want a larger bench of atleast 7 Judges to hear this matter.
— ANI (@ANI) December 5, 2017
இந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக 5 அல்லது 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து மேல்முறையீட்டு வழக்குகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ஆம் நாள் விசாரிப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!