அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: இந்தியாவில் நடக்கும் முக்கிய மாற்றங்கள்!

Ayothi Ramar Temple: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல உயர் அதிகாரிகள் முன்னிலையில், ராமர் கோவில் திறப்பு விழா இன்று அயோத்தியில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Jan 22, 2024, 06:31 AM IST
  • இன்று அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு.
  • பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
  • டெல்லியில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: இந்தியாவில் நடக்கும் முக்கிய மாற்றங்கள்! title=

Ayothi Ramar Temple: பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டுவந்த அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலை திறந்து வைக்கிறார்.  இதற்கான ஏற்பாடுகள் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.  அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக மாநில உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அயோத்தியில் உள்ளனர்.  உத்தரபிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராமர் கோவில் திறப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த விழா திங்கள்கிழமை மதியம் 12:30 மணிக்கு ஸ்ரீ ராமஜென்மபூமி கோவிலில் நடைபெறுகிறது.  "அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாங்கள் பிரதமர் மோடிக்காக காத்திருக்கிறோம், ராமர் கோவில் தயாராக உள்ளது. அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்" என்று கூறினார்.

மேலும் படிக்க | அன்னதானத்திற்கு 50 கோடி ரூபாய் கொடுத்தாரா பிரபாஸ்? இல்லைப்பா இல்லை! ஆனா...

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா சிறப்புகள்:

- அருண் யோகிராஜால் வடிவமைக்கப்பட்ட ராமர் சிலை, கோயிலின் கருவறைக்குள் நிலைநிறுத்தப்பட்டது. முக்காடு போர்த்தப்பட்டு, சிலையின் ஆரம்ப புகைப்படம் வியாழக்கிழமை கருவறையில் வைக்கப்பட்ட விழாவின் போது திறக்கப்பட்டது.  

- அயோத்தி ராமர் கோவில் விழாவிற்கான அழைப்பை காங்கிரஸ் நிராகரித்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி ஆகியோர் அயோத்தியில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சிக்கான அழைப்பை நிராகரித்துள்ளனர்.

- பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை மதியம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கிறார். விழாவை முடித்துவிட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசுகிறார்.

- அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் நாட்டின் அனைத்து முக்கிய ஆன்மீக மற்றும் மதப் பிரிவுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று பிரதமர் அலுவலகம் (PMO) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- சத்தீஸ்கர் முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை மதியம் 2:30 மணி வரை அரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று சத்தீஸ்கரின் அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

- அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை உத்திரபிரதேசம் மாநிலத்தில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று UPPCL தலைவர் ஆஷிஷ் குமார் கோயல் சனிக்கிழமை தெரிவித்தார்.  “அடுத்த 24 மணி நேரத்தில், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் முதலமைச்சரின் உத்தரவின்படி எந்த இடையூறும் இன்றி மின்சாரம் கிடைக்கு,” என்று ஆஷிஷ் குமார் கோயல் கூறியுள்ளார். 

- டெல்லி அரசின் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சமீபத்திய உத்தரவின்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பொது மற்றும் காலை ஷிப்ட்கள் திங்கள்கிழமை மூடப்பட்டிருக்கும்.  மேலும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாலை நேரப் பணி மதியம் 02.30 மணிக்கு தொடங்கும் என்றும் கல்வி இயக்ககம் தெளிவுபடுத்தியுள்ளது. "ஜிஎன்சிடிடியின் சேவைகள் துறையால் வெளியிடப்பட்ட அலுவலக குறிப்பாணையின்படி, அனைத்து டெல்லி அரசு அரை நாள் விடுப்பை அறிவித்துள்ளது.  22.01.2024 அன்று அனைத்து ஊழியர்களும் ராமர் கோவில் திறப்பு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்க உதவும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அனைத்து அரசு அலுவலகங்களும் மாலை ஷிப்டில் இயங்கும்" டெல்லி அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அயோத்தியில் உச்சக்கட்ட பாதுகாப்பு - ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News