அயோத்தி ராமர் கோவில் பிரச்சனையில் சுமூக தீர்வு காண வேண்டும்; ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்!

ஸ்ரீ ரவிசங்கர் அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையை அமைதியான வழியில் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Last Updated : Dec 15, 2017, 04:04 PM IST
அயோத்தி ராமர் கோவில் பிரச்சனையில் சுமூக தீர்வு காண வேண்டும்; ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்! title=

பல ஆண்டுகளாக நீடித்து வரும் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை வழக்கில், அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. 

அத்தீர்ப்பில் நிலத்தை, மனுதாரர்களான சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா (துறவியர் பேரவை) அமைப்பு, ராம் லல்லா அமைப்பு ஆகிய மூவரும் தங்களிடையே மூன்று பகுதிகளாக பிரித்துக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இத்தீர்பில் உடன்படு இல்லாமல் சம்மந்தப்பட்டவர்கள், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 

இந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதனையடுத்து மேல்முறையீட்டு வழக்குகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ஆம் நாள் விசாரிப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இது தொடர்பான ஸ்ரீஸ்ரீரவி சங்கர் கொல்கத்தாவில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையை அமைதியான வழியில் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
இரு சமூகங்களும் ஒன்று சேர்ந்து  சுமூக தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார்.

இது தொடர்பான பிரச்சினை வழக்கில், அவர் முதல்-மந்திரி  யோகி ஆதித்யநாத்,மற்றும் இக்பால் அன்சாரி மற்றும் ஹாஜி மெஹ்பூப்  உள்ளிட்ட  முஸ்லிம் அமைப்பு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தியும் இருக்கிறார்.
 
மேலும், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் என்பவர் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு வாழும் கலை என்ற அமைப்பை நிறுவி உலகம் முழுவதும் யோகா மையங்களை நடத்தி வருகிறார்.

இலங்கை பிரச்சினை உள்பட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை அமைதியாக தீர்க்க முயற்சி மேற்கொண்டார். போர், பூகம்பம், புயலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி வருகிறார்.

என்பது குறிபிடத்தக்கது.

Trending News