எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை பாஜக தலைவர் அமித் ஷா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கடந்த 9 வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய். இவருக்கு வயது 93. அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். முன்னதாக இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரமாக வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாகவும், அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று இரவு அறிவித்தது. உயிர் காக்கும் உபகரணங்களுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற பாஜக தலைவர் அமித் ஷா, வாஜ்பாய் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
BJP President Amit Shah arrives at All India Institute of Medical Sciences (AIIMS) where former Prime Minister Atal Bihari Vajpayee is admitted. Vajpayee’s condition is critical & he is on life support system. #Delhi pic.twitter.com/CbjIqyHruD
— ANI (@ANI) August 16, 2018