மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி அவர்கள் தன் கடையில் செய்யப்படும் லட்டுவினை விரும்பி சாப்பிடுவார் என கான்பூரு லட்டு கடை உரிமையாளர் உருக்கமாக தெரிவித்துள்ளார்!
முன்னாள் பிரதமர் மற்றும் பாரத்திய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் ஆகஸ்ட்., 17-ஆம் நாள் உடல்நல குறைவால் டெல்லி AIIMS மருத்துவமனையில் காலமானார்.
வாஜ்பாயி அவர்களின் மறைவினை அடுத்து நாடு முழுவதும் 7 நாள் துக்கம் அனுசரிக்கபட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. மறைந்த பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் உடலுக்கு தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
'Thaggu ke Laddu' a sweet shop in Kanpur was often visited by former PM #AtalBihariVajpayee. Owner says, 'whenever BJP leaders in Kanpur used to go to meet him they would get laddoos packed for him. He loved food.' (16.08.18) pic.twitter.com/eNpoYRxRKW
— ANI UP (@ANINewsUP) August 17, 2018
இந்நிலையில் வாஜ்பாயி அவர்கள் தன் கல்லூரி காலங்களை கழித்த கான்பூர் நகரில் இருக்கும் 'தக்கு கே லட்டு' கடையில் விற்கப்படும் லட்டுகளை விரும்பி உன்பார் எனவும், அரசியல் தலைவர் ஆன பிறகும் கான்பூர் வருகையில் அவர் தன் லட்டு கடைக்கு வந்து லட்டு வாங்கிச் செல்வார் எனவும் கடையின் உரிமையாளர் தெரிவத்துள்ளார். மேலும் வாஜ்பாயி அவர்களை காண செல்லும் தலைவர்கள் தன் கடையில் இருந்து லட்டு பாக்கெட்டுகளை வாங்கிச் செல்வர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.