மேற்கு வங்கத்தில் பாஜகவில் சேருவார் என்ற ஊகத்தை நிராகரித்த சவுரப் கங்குலி அனைவருக்கும் தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி அரசியலில் நுழைய போவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.
தான் அரசியலில் நுழைய விரும்பவில்லை என்றும், மேற்கு வங்க (West Bengal) சட்டமன்றத் தேர்தலின் போது கட்சிக்காக பிரச்சாரம் செய்ய மாட்டார் என்றும் பாஜக தலைமைக்கு சவுரவ் கங்குலி (Saurav Ganguly) தெளிவுபடுத்தியுள்ளார் என்று அறிக்கை ஒன்று கூறுகிறது.
சவுரவ் கங்குலி தான் தீவிர அரசியலில் நுழைய விரும்பவில்லை என்றும், கிரிக்கெட் நிர்வாகியாக தனது பணியில் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், கடந்த மாதம் பாஜகவுக்கு (BJP) சவுரவ் தெளிவுபடுத்தினார்.
சவுரவ் தனது மறுப்பை தெரிவித்த பின்னர், அரசியலில் நுழைவதற்கு மீண்டும் சிந்திக்குமாறு கட்சி அவருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக சவுரவ் கங்குலியிடமிருந்து அதிகபார்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை என்றாலும், இந்த கூற்றை பாஜக உறுதிப்படுத்தவும் இல்லை அல்லது மறுக்கவும் இல்லை.
2019 பொதுத் தேர்தலுக்கு முன்பே, சவுரவ் கங்குலி கட்சியில் சிறப்பான வகையில் முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என்று கட்சி விரும்பியது, ஆனால் அவர் பல விஷயங்களில் பிஸியாக இருந்தார் என்று பாஜக வட்டாரம் தெரிவித்துள்ளது.
இன்று நிலைமை வேறுவிதமாக உள்ளது என்றும், இன்று பாஜக வங்காளத்தில் ஒரு பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது என்றும் கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது. சவுரவ், கட்சிக்காக எடுக்கும் எந்தவொரு பங்கும் கட்சிக்கு பெரிதும் உதவும் என்று அவர் மேலும் கூறினார்.
ALSO READ | ஷாரூகானின் பிறந்த நாளுக்கு ஜூஹிசாவ்லா வழங்கிய பரிசு..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR