புதுடில்லி: தீபாவளிக்கு பிறகு டில்லியில் காற்றின் தரம் மிகவும் அபாய கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் டில்லியில் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
டில்லி நகரமே புகைமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் நேற்று 3 மாநகராட்சிகளை சேர்ந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 17 வருடங்களில் இல்லாத அளவுக்கு மோசமான கனரக பனிப்புகை நிலவுகிறது.
இந்நிலையில் புகை மூட்டத்தை டில்லியில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து ஆலோசிப்பதற்காக முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அவசரமாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி உள்ளார். இந்த கூட்டத்தில், தற்போதைய நிலையை சமாளிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.