INX மீடியா முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம் மற்றும் ப சிதம்பரம் அவர்களின் ரூ.54 கோடி மதிப்பிளான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது!
புது டெல்லி ஜோர் பாக், உதகை, கொடைக்கானலில் உள்ள அவரது பங்களாக்களும், பார்சிலோனாவில் உள்ள சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு, அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதில் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
ED attaches around Rs 54 crores worth properties and bank deposits of Karti Chidambaram in connection with INX Media case. Properties include,
Jor Bagh in New Delhi, Ooty & Kodaikanal bungalows, residence in UK and property in Barcelona pic.twitter.com/TTK31PMTTo— ANI (@ANI) October 11, 2018
இது தொடர்பாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மற்றும் ப சிதம்பரம் அவர்களின் ரூ.54 கோடி மதிப்பிளான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது!