28000 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வாங்கும் இந்தியா

Arms Procurement Proposals: 28,000 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது, இதில் திரள் ட்ரோன்கள், கார்பைன்கள் மற்றும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் அடங்கும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 27, 2022, 06:25 AM IST
  • சீனாவுடனான எல்லை பிரச்சனையில் இந்தியா தீவிர கவனம்
  • புதிய ஆயுத கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதல்
  • 28000 கோடி ரூபாய் ராணுவ தளவாடங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
28000 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வாங்கும் இந்தியா title=

புதுடெல்லி: சீனாவுக்கு அதன் பாணியிலேயே பதில் சொல்லும் இந்தியா, 28 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்களை வாங்கவிருக்கிறது. இந்தியா, சீனாவுடன் நட்பாக இருக்க விரும்பினாலும், 2020 ஆம் ஆண்டில் கிழக்கு லடாக்கில் சீனாவின் தவறான ஊடுருவலுக்கு பிறகு, இந்தியா அந்நாட்டின் மீதான அணுக்கமான கொள்கையை கைவிட்டுள்ளது. அவர்களின் செயல்களுக்கு பதில் அளிக்க இந்தியா செவ்வாய்கிழமை ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது, அதன்படி நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆபத்தான ஆயுதங்களை இந்தியா வங்குகிறது அதோடு, ட்ரோன்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவை தாக்க, சீனா தொடர்ந்து தாக்குதல் ஆளில்லா விமானங்களின் எண்ணிக்கையையும் வலிமையையும் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, இந்தியப் படைகள் இப்போது ட்ரோன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.  கண்காணிப்பு மற்றும் தாக்குதலுக்காக ஸ்வர்ம் ட்ரோன்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆளில்லா விமானங்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து மட்டுமே வாங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் முதலீடு; நிதி அமைச்சர் கூறுவது என்ன

பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (Defense Acquisition Council) கூட்டத்தில் இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆயுதப்படைகளுக்கு ரூ.28 ஆயிரத்து 732 கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஸ்வர்ம் ட்ரோன்கள் மற்றும் க்ளோஸ் கால் கார்பைன்கள் மற்றும் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள் உள்ளிட்ட பிற ஆயுதங்களும் அடங்கும். இந்த ஆயுதங்கள் அனைத்தும் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படும்.
 
2021ல் இந்தியா வலிமையைக் காட்டியது

அக்டோபர் 2020 இல், திரள் ட்ரோன்களின் (Swarm Drone) சக்தியை சீனா நிரூபித்தது, அதாவது திரளான நூற்றுக்கணக்கான தாக்குதல் ட்ரோன்களை பயன்படுத்துவது என்பதாகும். இதற்கு பதிலடியாக, 2021 ஜனவரியில் டெல்லியில் நடைபெற்ற ராணுவ தின அணிவகுப்பில் இந்தியாவும் உள்நாட்டு ஸ்வார்ம் ட்ரோன்களின் சக்தியைக் காட்டியது. இதற்குப் பிறகு, 2022 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் பீட்டிங் தி ரிட்ரீட் விழாவில் உள்நாட்டு தயாரிப்பான ஆளில்லா விமானங்களின் திறன் நிரூபிக்கப்பட்டது.

மேலும் படிக்க | உங்கள் வீட்டு நாயை பராமரிக்க காவலர் வேண்டுமா ? ஆர்டர்லி முறைக்கு நீதிபதி சரமாரிக் கேள்வி

4 லட்சம் கார்பைன்களும் வாங்கப்படும்
 
கண்காணிப்பு மற்றும் தாக்குதலுக்காக உள்நாட்டு ஸ்வர்ம் ட்ரோன்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாயன்று ஒப்புதல் அளித்துள்ளது. எவ்வாறாயினும், இவற்றில் எத்தனை ஆளில்லா விமானங்கள் வாங்கப்படும் என்பது குறித்து அமைச்சகம் தற்போது தெளிவுபடுத்தவில்லை.

மொத்தம் ரூ.28732 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆளில்லா விமானங்கள் மட்டுமின்றி, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு மிகவும் தேவையான 4 லட்சம் கார்பைன்களும் ராணுவத்துக்கு வாங்கப்படும். இதுதவிர புல்லட் புரூப் ஜாக்கெட்டுகளுக்கான 14 விரைவு ரோந்து படகுகள், கடலோர காவல்படை ஆகியவையும் வாங்கப்படும்.

கடற்படைக்கு பல புதிய ஜெனரேட்டர்கள் 

இந்திய கடற்படையின் பலத்தை வலுப்படுத்த அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கடற்படைக்கு 1,250-கிலோவாட் திறன் கொண்ட மேம்பட்ட கடல் எரிவாயு டர்பைன் ஜெனரேட்டர்களை வாங்குவதற்கு பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஜெனரேட்டர்கள் இந்திய கடற்படையின் கொல்கத்தா கிளாஸ் கப்பல்களில் நிறுவப்படும். இதன் மூலம் கடலில் செயல்படும் போதும் எளிதாக மின்சாரம் தயாரிக்க முடியும்.

மேலும் படிக்க | ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளி கல்வித்துறை! புதிய அதிரடி திட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News