மீண்டும் டெல்லியில் போராட்டம்: 2 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் போராட்டம் வலுக்கிற நிலையில் டெல்லியில் இன்று 2 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 20, 2019, 09:24 AM IST
மீண்டும் டெல்லியில் போராட்டம்: 2 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்   title=

புது டெல்லி: சி.ஏ.ஏ (CAA) மற்றும் என்.ஆர்.சி (NCR) சட்டத்திற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து கூட்டத்தை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளுக்கு மத்தியில் மங்களூரில் இரண்டு பொதுமக்கள் உயிர் இழந்தனர். டெல்லியின் சில பகுதிகளில் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ ஆகியவை தங்கள் சேவைகளை நிறுத்தியதால் இணையம் முடக்கப்பட்டு உள்ளது. டெல்லியின் செங்கோட்டை மற்றும் ஜந்தர் மந்தர் அருகே கூடியிருந்த போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) புதுடெல்லியின் சில பகுதிகளில் இணைய சேவைகள் நிறுத்தப்பட்ட பின்னர், உத்தரபிரதேசத்தின் அலிகர், கர்நாடகாவிலும் இணைய சேவைகள் தடை செய்யப்பட்டு உள்ளன.

முன்னதாக இந்த சட்டத்தை எதிர்த்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் காவல்துறையினருடன் மோதல் நடத்தியதில், இரு தரப்பு மக்களும் காயமடைந்ததை அடுத்து டெல்லியில் நடந்த போராட்டம் கசப்பாக மாறியது. சீலம்பூர், ஜாப்ராபாத் போன்ற பகுதிகளில் வசிப்பவர்களும் வீதிகளில் இறங்கி குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுகளையில் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக இந்த சட்டத்தை எதிர்த்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் காவல்துறையினருடன் மோதல் நடத்தியதில், இரு தரப்பு மக்களும் காயமடைந்ததை அடுத்து டெல்லியில் நடந்த போராட்டம் கசப்பாக மாறியது. சீலம்பூர், ஜாப்ராபாத் போன்ற பகுதிகளில் வசிப்பவர்களும் வீதிகளில் இறங்கி குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுகளையில் கைது செய்யப்பட்டனர்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள் ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் டெல்லியில் நேற்று பல்வேறு இடங் களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்காரணமாக 20 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. சாலை போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்தது. டெல்லி விமான நிலை யத்தில் 19 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 16 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக பல திட்டமிட்ட போராட்டங்களை அடுத்து, தேசிய தலைநகரில் இன்று 2 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஜசோலா விஹார் ஷாஹீன் பாக் ஆகிய மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மெட்ரோ நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News