தோசைக்கு சட்னி கொடுக்க மாட்டியா" சப்ளையரின் மூக்கை கடித்த வாலிபர்!

Kerala Crime News: தோசைக்கு சட்னி கொடுக்காததால் ஆத்திரமடைந்த வாலிபர் சப்ளையரின் மூக்கை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Written by - Ezhilarasi Palanikumar | Edited by - Shiva Murugesan | Last Updated : Oct 4, 2023, 06:33 PM IST
தோசைக்கு சட்னி கொடுக்க மாட்டியா" சப்ளையரின் மூக்கை கடித்த வாலிபர்! title=

Malayalam Latest Crime News: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பனா அருகே புளியன்மான் என்ற பகுதியில் தமிழகத்தை சேர்ந்த கவியரசன் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது கடையில் சப்ளையராக பணிபுரிபவர் தான் சிவசந்திரன். இந்நிலையில் கடந்த சனிகிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் மழை பெய்து கொண்டிருந்ததால் கடை ஊழியர்கள் வேகமாக கடையை  பூட்டிவிட்டு கிளம்ப தயாராகினர். அப்போது சுஜீஷ் என்பவர் கடைக்கு உணவு சாப்பிட வந்துள்ளார்.

இவர் இந்த ஹோட்டலுக்கு எதிரே உள்ள பேக்கரி கடை வைத்திருக்கும் முதலாளியின் மகன் என்று சொல்லப்படுகிறது. அதானால் சுஜீஷ் ஏற்கனவே தெரிந்தவர் என்ற அடிப்படையில் ஊழியர்கள் சாப்பிடுவதற்காக வைத்திருந்த தோசையை சுஜீஷுக்கு கொடுத்துள்ளனர். ஆனால் அந்த தோசையுடன் சட்னி இல்லை என்று கூறி சுஜீஷ் கடை ஊழியர் சிவசந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

மேலும் படிக்க - கேள்வி கேட்ட விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி ஒன்றிய செயலர்!

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறியுள்ளது. இதில் சுஜீஷ் சிவசந்திரன் மூக்கை பலமாக கடித்து வைத்துள்ளார். இதானால் அவரது மூக்கில் ரத்தம் கொட்டியுள்ளது. இந்த சண்டையை தடுக்க வந்த மற்ற ஊழியர்களையும் சுஜீஷ் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. பின்னர் படுகாயமடைந்த ஊழியர் சிவ சந்திரனை சிகிச்சைக்காக கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த மோதலின் போது ஹோட்டல் ஊழியர்கள் தாக்கியதில் காயமடைந்த சுஜுஷும் கட்டபனாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவத்தில் சிவச்சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வண்டன்மேடு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் குடிநீர் இணைப்பு தொடர்பாக ஏற்கனவே இருதரப்பினருக்கும் பிரச்சனை இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. தோசைக்கு சட்னி தராத ஆத்திரத்தில் ஹோட்டல் ஊழியரின் மூக்கை பதம் பார்த்த நபரின் செயல் ஹோட்டல் ஊழியர்களை கலக்கமடைய செய்துள்ளது.

மேலும் படிக்க - திருப்பதியில் தமிழக தம்பதியின் 2 வயது குழந்தை கடத்தல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News