ஆந்திரா ரயில் விபத்தில் 9 பேர் பலி! எப்படி நடந்தது இந்த விபத்து?

Andhra Train Accident: விசாகப்பட்டினம்-பலாசா பாசஞ்சர் ரயில் மற்றும் விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் மோதியதில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 30, 2023, 06:17 AM IST
  • ஆந்திராவில் 2 ரயில்கள் மோதியதில் 9 பேர் பலி.
  • 29 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
  • யாருடைய தவறு என போலீசார் விசாரணை.
ஆந்திரா ரயில் விபத்தில் 9 பேர் பலி! எப்படி நடந்தது இந்த விபத்து? title=

Andhra Train Accident: ஞாயிற்றுக்கிழமை ஆந்திராவில் இரண்டு ரயில்கள் மோதியதில் ஒன்பது பேர் பலியாகி உள்ளனர் மற்றும் 29 பேர் காயமடைந்தனர். ஒடிசாவில் 280 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற பயங்கரமான மூன்று ரயில்கள் மோதலுக்கு சில மாதங்களுக்குப் பிறகு இந்த விபத்து நடந்துள்ளது.  விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா நோக்கிச் சென்ற சிறப்பு பயணிகள் ரயில், சிக்னல் இல்லாததால் கோத்சவத்சாலா அருகே அலமண்டா மற்றும் கண்டகபள்ளி இடையே தண்டவாளத்தில் நின்றதால், விசாகப்பட்டினம் - ராய்காட் பயணிகள் ரயில் மோதியதில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. "தரவுகளின்படி, 9 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 29 பேர் காயமடைந்துள்ளனர்" என்று கிழக்கு கடற்கரை ரயில்வேயின் CPRO பிஸ்வஜித் சாஹு செய்தி நிறுவனமான ANI இடம் தெரிவித்தார்.

மேலும் படிக்க | ஐ.நா-வில் போர் நிறுத்த தீர்மானம்: இந்தியா ஏன் புறக்கணித்தது? அதற்கான காரணம் என்ன?

ரயில்வே அதிகாரிகளின் பிழையின் விளைவாக இந்த சோக சம்பவம் ஏற்பட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன, சிக்னலை லோகோ பைலட் கவனிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.  டெல்லி ரயில்வே அமைச்சகத்தின் வார் ரூம் இந்த அவரச நிலைமையை கண்காணித்து வருவதாக ரயில்வே வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.  மேலும், கிழக்கு கடற்கரை ரயில்வே உதவி எண்களை வெளியிட்டுள்ளது.  விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.  "விசியநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி ரயில் விபத்து சம்பவம் குறித்து முதல்வர் ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். விரைவான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்" என்று முதலமைச்சர் அலுவலகம் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.

"மேலும், அருகில் உள்ள விசாகப்பட்டினம் மற்றும் அனகாபள்ளி மாவட்டங்களில் இருந்து முடிந்த அளவு ஆம்புலன்ஸ்களை அனுப்பி, அருகிலுள்ள மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை அளிக்க அனைத்து வகையான ஏற்பாடுகளையும் செய்ய முதல்வர் அறிவுறுத்தினார். சம்பவம் தொடர்பான விவரங்களை அவ்வப்போது தனக்கு தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கோர விபத்து குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். விபத்து நடந்த இடத்துக்கு மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கல்வி அமைச்சர் பி.சத்தியநாராயணா, மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருவதாகவும் முதல்வர் அவரிடம் தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சரிடம் அவர் மேலும் தெரிவித்தார்.  இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் PMNRF-ல் இருந்து 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க | ’ஓபிசி, தலித் பழங்குடியினருக்கு பிரதிநிதித்துவம் இல்லை’ ராகுல் காந்தி அட்டாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News