வணிக ரீதியாக தொழில்துறைகளை எளிதாக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின்(UTs) தரவரிசைப் பட்டியலில் ஆந்திரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது!
வணிக ரீதியாக தொழில்துறைகளை எளிதாக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின்(UTs) தரவரிசைப் பட்டியலினை வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்த ஆண்டும் ஆந்திரா முதல் இடம் பிடித்துள்ளது.
கடந்தாண்டு (2016-ஆம் நிதியாண்டிற்கான பட்டியல்) இந்த பட்டியலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதலிடம் பிடித்தது. மிகவும் சுலபமான முறையிலும், குறைந்த முதலீட்டிலும் புதிய தொழில்களை துவங்க முன்வரும் சிறுதொழில் முனைவோருக்கு வாய்ப்புகளை வழங்கும் மாநிலங்களின் தரவரிசையினை இந்த பட்டியல் கொண்டு வருகிறது.
Andhra Pradesh has been ranked No. 1 in 'ease of doing business' by the Commerce & Industry ministry. pic.twitter.com/tkoMpGMgws
— ANI (@ANI) July 10, 2018
அந்த வகையில் கடந்தாண்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 372 முனைப்பு புள்ளிகளை வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கண்டது. இதன் அடிப்படையில் 2016-ஆம் ஆண்டிற்கான, வணிக ரீதியாக தொழில்துறைகளை எளிதாக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின்(UTs) தரவரிசைப் பட்டியலில் ஆந்திரா மாநிலம், தெலுங்கான மாநிலம் முதல் இடம் பெற்றது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான, வணிக ரீதியாக தொழில்துறைகளை எளிதாக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின்(UTs) தரவரிசைப் பட்டியலில் ஆந்திரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது!