பொது குறைகளை நிவர்த்தி செய்ய ஜூலை 1 முதல் ‘மக்கள் தர்பார்’ நிகழ்ச்சி!!

ஆந்திராவில் ஜூலை 1 முதல் முதல் மக்கள் தர்பார் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்!!

Last Updated : Jun 30, 2019, 02:34 PM IST
பொது குறைகளை நிவர்த்தி செய்ய ஜூலை 1 முதல் ‘மக்கள் தர்பார்’ நிகழ்ச்சி!! title=

ஆந்திராவில் ஜூலை 1 முதல் முதல் மக்கள் தர்பார் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்!!

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டதில் இருந்து அதிரடியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறார். ரேஷன் பொருட்கள் அனைத்தையும் வீட்டிற்கே சென்று விநியோகிக்கும் திட்டம், மாநில போக்குவரத்து கழகத்தை அரசே நடத்தும் என்ற முடிவு, காவலர்களுக்கு வார விடுமுறை என பல அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளார். அதன் வகையில் பொது குறைகளை நிவர்த்தி செய்வதற்காக ஜூலை 1 முதல் 'பிரஜா தர்பார்' என்ற நிகழ்ச்சியை தொடங்கவுள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. 

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் மனு அளிப்பதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் நாளை முதல் தினமும் மனுகள் அளிக்கவரும் மக்களை நேரில் சந்தித்து, அவர்களது மனுக்களை பெற முதலமைச்சர் ஜெகன்மோகன் முடிவு செய்துள்ளார். இத்திட்டத்திற்கு மக்கள் தர்பார் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் மனுக்கள் அளிக்கவரும் மக்களுக்காக காத்திருக்கும் அறை, குடிநீர் வசதி,  சிற்றுண்டி வசதி, தாய்மார்களுக்காக தனியறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் மக்களைச் சந்தித்து மனு பெற்று வந்த முன்னாள் முதலமைச்சராக ராஜசேகர ரெட்டியின் வழியை, அவரது மகன் ஜெகன் மோகன் தற்போது பின்பற்ற தயாராகிவிட்டார்.

அமராவதியில் உள்ள ததேபள்ளியில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக எண்ணிக்கையிலான மக்களைப் பூர்த்தி செய்வதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, மேலும் மனுதாரர்களுக்கு டோக்கன்கள் அல்லது பாஸ்கள் வழங்கப்படும் என்றும், ‘முதலில் வந்தவர்களுக்கு முதலில் சேவை’ அடிப்படையில் பெறப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து ஜெகன் கூறுகையில்; "நீங்கள் அவர்களுக்கு வழங்கும் தீர்வுக்கான காலக்கெடுவை மக்களுக்கு வழங்குங்கள். அவர்களின் பிரச்சினை எப்போது தீர்க்கப்பட முடியும், எப்படி என்று அவர்களிடம் சொல்லுங்கள். இந்த காலக்கெடு பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்ய நான் சீரற்ற சோதனைகளை மேற்கொள்வேன்" என தெரிவித்துள்ளார். 

 

Trending News