புது டெல்லி: ஜாமியாவில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இதுபோன்ற சம்பவத்தை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று கூறியுள்ளார். டெல்லி போலீஸ் கமிஷனரிடம் பேசிய அவர், கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஜாமியாவில் "ராம் பக்த் கோபால்" என்ற இளைஞர் நடத்திய துப்பாக்கி சுட்டில் மாணவர் காயம் அடைந்த பின்னர், இந்த பிரச்சினை பெரும் விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது. மேலும் ஜாமியா பகுதியில் CAA-வுக்கு எதிராக போராட்டம் நடத்துப்பவர்கள் ஏராளமானவர்கள் திரண்டுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பாஜக மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட்:
இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, "'டெல்லியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நான் டெல்லி போலீஸ் கமிஷனரிடம் பேசினேன், மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இதுபோன்ற எந்தவொரு சம்பவத்தையும் மத்திய அரசு பொறுத்துக் கொள்ளாது. இந்த சம்பவம் மிக தீவிரமாக எடுத்து விசாரிக்கப்படும். குற்றவாளி தப்பிக்க முடியாது" எனக் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ்:
ஜாமியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியும் (AAP) காங்கிரஸ் (Congress) கட்சியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. பாஜக தலைவர்கள் வெறுப்பை தூண்டும் விதமாக பேசிவருவதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள், டெல்லியில் இயல்பு நிலையை பாஜக கெடுப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் டெல்லியில் தேர்தலை ஒத்திவைக்க பாஜக விரும்புகிறது என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது