Big Statement: எங்கள் முடிவில் சில தவறுகள் இருக்கலாம்! தளுதளுக்கும் அமித் ஷா

எங்கள் ஆட்சியில் சில தவறான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் ஆனால் நோக்கத்தில் எந்த தவறும் இருப்பதாக யாராலும் கூற முடியாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 17, 2021, 02:16 PM IST
  • பாஜக அரசில் சில தவறான முடிவுகள் இருந்திருக்கலாம் - அமித் ஷா
  • தவறுகளுக்கு உள்நோக்கம் கிடையாது
  • எதிரிகள் கூட எங்கள் மீது குற்றம் கூறமுடியாது
Big Statement: எங்கள் முடிவில் சில தவறுகள் இருக்கலாம்! தளுதளுக்கும் அமித் ஷா title=

புதுடெல்லி: எங்கள் ஆட்சியில் சில தவறான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் ஆனால் நோக்கத்தில் எந்த தவறும் இருப்பதாக யாராலும் கூற முடியாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

“கடந்த 7 ஆண்டுகளில் நாடு நிறைய மாற்றங்களைக் கண்டுள்ளது என்பதை விமர்சகர்கள் கூட ஒப்புக்கொள்வார்கள். எங்கள் அரசு மீது எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டும் வரவில்லை. சில தவறான முடிவுகள் இருந்திருக்கலாம், ஆனால் எங்கள் நோக்கம் தவறானது என்று யாரும் கூற முடியாது,” என்று அமித் ஷா இன்று (டிசம்பர் 17, 2021) கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி பல கட்சிகள் கொண்ட ஜனநாயக அமைப்பில் மக்களின் நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டினார் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ( United Progressive Alliance (UPA)) அரசாங்கத்தைப் பற்றி குறிப்பிட்ட அமித் ஷா, “மோடி அரசாங்கம் ஆட்சியப் பொறுப்பேற்றபோது, மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது அவநம்பிக்கை இருந்தது பல கட்சிகளைக் கொண்ட நமது ஜனநாயக அமைப்பு தோல்வியடைகிறதா என்று நாடே யோசித்தது. பல கட்சிகள் கொண்ட நமது ஜனநாயக அமைப்பில் (multi-party democratic system) பொதுமக்களின் நம்பிக்கையை பிரதமர் மோடி வலுப்படுத்தியதே எங்கள் அரசின் மிகப்பெரிய சாதனையாகும்” என்று பெருமிதம் தெரிவித்தார்.

இன்று லக்னோவின் ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் ஒரு பேரணியை அமித் ஷா நடத்த உள்ளார். "Sarkar Banao, Adhikar Pao" (அரசாங்கத்தை உருவாக்குங்கள், உரிமைகளைப் பெறுங்கள்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பேரணியில் முதல்வர் யோகி ஆதித்யநாத், நிஷாத் கட்சி தலைவர் சஞ்சய் நிஷாத் மற்றும் மாநில பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங் ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.

உத்தரபிரதேச மாநில துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா ஆகியோரும் பேரணியில் கலந்து கொள்கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News