ஆவணமாக செயல்படுகிறார் ராகுல்: நிர்மலா சீதாராமன் தாக்கு

ரஃபேல் போர் விமான விவகாரத்தில் SC தீர்ப்பை மதிக்காமல் பேசுவதா? என  ராகுலை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கியுள்ளார்! 

Last Updated : Dec 17, 2018, 03:10 PM IST
ஆவணமாக செயல்படுகிறார் ராகுல்: நிர்மலா சீதாராமன் தாக்கு title=

ரஃபேல் போர் விமான விவகாரத்தில் SC தீர்ப்பை மதிக்காமல் பேசுவதா? என  ராகுலை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கியுள்ளார்! 

ரஃபேல் விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறிவிட்டதாகவும், மத்திய அரசு கூறியபடி ரஃபேல் விலை விவரங்கள் CAG அல்லது நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவிடம் வழங்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டை BJP ஏற்கெனவே மறுத்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சி தெரிந்தே, ரஃபேல் விமானங்களின் விலை விவகாரத்தில் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டினார்.

ரஃபேல் தொடர்பாக விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல், காங்கிரஸ் கட்சி அவமரியாதை செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ரஃபேல் விலை விவரங்களை CAG எனப்படும் தலைமைக் கணக்காயரிடம் வழங்கியிருப்பதாகவும், CAG ஆய்வுக்குப் பிறகு அது நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவுக்கு செல்லும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். நாடாளுமன்ற முறையின் கீழ் இது ஒரு நிகழ்முறை என்றும், அது ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திற்கு தகவல் வரும் நிகழ்முறையை தாங்கள் விளக்கியதாகவும், அதில் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் உண்டு எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தாங்கள் விவரங்களை வழங்கியதாகவும், அதை விளக்கப்படுத்திக் கொள்வதில் சிக்கல் எழுந்திருக்கலாம் எனவும் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார். நீதிமன்றம் அதை பரிசீலித்து, சரிசெய்ய வேண்டும் என தாங்கள் விரும்புவதாகவும், நீதிமன்றத்திற்கு அதுவே தங்களது வேண்டுகோள் எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

அரசியல் ரீதியில் பிளவுபட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு இந்த விவகாரத்தை ஆய்வு செய்ய காங்கிரஸ் கோருவது உள்நோக்கம் கொண்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார். 

 

Trending News