ரஃபேல் குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசுக்கு கிடைத்த அங்கீகாரம்.....

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான தீர்ப்பு மத்திய அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த அங்கீகாரம் என, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்! 

Last Updated : Dec 15, 2018, 09:41 AM IST
ரஃபேல் குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசுக்கு கிடைத்த அங்கீகாரம்..... title=

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான தீர்ப்பு மத்திய அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த அங்கீகாரம் என, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்! 

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு குறித்த காங்கிரஸ் காட்சியின் புகாருக்கு பாஜக தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. 

இந்நிலையில், டெல்லியில், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ரபேல் ஒப்பந்த விவகாரத்தை முன்வைத்து நடைபெற்ற வாத பிரதிவாதங்கள், உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் ஒருவழியாக முடிவுக்கு வந்திருப்பதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிம்மதி வெளியிட்டிருக்கிறார். அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி, மத்திய அரசு ரபேல் ஒப்பந்தத்தை இறுதி செய்ததை, உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான தீர்ப்பு, மத்திய அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுவதாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். ரபேல் போர் விமானங்கள் தொடர்பான விலை ரகசியமாக இருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கூற்றை, உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டிருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா தெரிவித்திருக்கிறார். 

இவரைத் தொடர்ந்து பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சி திட்டத்திற்கும் முட்டுக்கட்டை போடுபவர்கள், நாட்டின் பாதுகாப்பையே சமரசம் செய்து கொள்ளும் வகையில், பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார்.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான புகார்கள் அனைத்தும் கற்பனையாக எழுதப்பட்ட கதை என்பதை, உச்சநீதிமன்ற தீர்ப்பு நிரூபித்திருப்பதாக, அவர் தெரிவித்திருக்கிறார். பேச்சுவார்த்தையின்போது கூறப்பட்ட விலையை விட, இறுதி செய்யப்பட்ட விலை குறைவானது என்று கூறியிருக்கும் அருண்ஜேட்லி, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

 

Trending News