உங்கள் திருமண வாழ்க்கை அமோகமாக இருக்க வேண்டும் என்றால் யாரும் சொல்லாத இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் இந்த விஷயங்களை தவறாமல் கடைபிடிக்கவும்
திருமணம் என்பது வாழ்க்கையில் இரு மனங்கள் நீண்ட தூரம் பயணிக்கும் புதியதொரு அத்தியாயம். இதில் அன்பு, அரவணைப்பு, நம்பிக்கை, தியாகம் என இருந்தால் மட்டுமே இந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கோபம், ஈகோ, விட்டுக்கொடுத்தல் இல்லாமை ஆகியவை மேலோங்கி இருந்தால் திருமண வாழ்க்கை கசப்பாகவே இருக்கும். இருவரும் ஒருவரையொருவர் புரிந்து வாழ்வது அவசியம். அதற்கு இந்த 5 விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்
எந்த விஷயமாக இருந்தாலும் நேரடியாக பேசுங்கள். அனுமானத்தின் அடிப்படையில் எந்த விஷயத்தையும் கேட்கவே கூடாது. நேரடியாக பேசும்போது பிரச்சனைகளுக்கு தீர்வு மட்டுமே கண்களுக்கு தெரியும். அனுமானத்தின் அடிப்படையில் செயல்பட்டால் விரிசல் அதிகமாகும்.
சின்ன சின்ன விஷயங்களை கொண்டாடுங்கள். ஒருவரையொருவர் அடிக்கடி மகிழ்ச்சிப்படுத்துங்கள். சந்தோஷம் உங்கள் வாழ்க்கையில் நீடித்திருக்கும்
திருமண வாழ்க்கையில் இருந்தாலும் பிரைவசியை விரும்பினால், அந்த நேரத்தில் தொந்தரவு செய்யக்கூடாது. ஒருவரின் விருப்பத்தை இன்னொருவர் மீது திணிக்காமல் இருப்பது ஆரோக்கியமானதாக இருக்கும்.
திருமண வாழ்க்கையில் பொறுமை மிக மிக அவசியம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போக வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்படுவது சிக்கலான நேரத்தில் பிரச்சனைக்கு தீர்வு காண உகந்ததாக இருக்கும்.
திருமணத்துக்குப் பிறகு அன்பை பரிமாறிக் கொள்வது என்பது தம்பதிகளிடையே குறைந்துவிடுகிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் உங்களின் ரொமான்ஸ் குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அன்பு மேலோங்கியிருக்கும்.