பண்டிகை காலத்தில் மோடி அரசு அளித்த பம்பர் பரிசு: குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டது

Variable Dearness Allowance: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறைந்தபட்ச ஊதியத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்றத்தின் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 27, 2024, 01:12 PM IST
  • மத்திய அரசு குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை உயர்த்தியுள்ளது.
  • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.
  • முழு விவரங்களை இங்கே காணலாம்.
பண்டிகை காலத்தில் மோடி அரசு அளித்த பம்பர் பரிசு: குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டது title=

Variable Dearness Allowance: பண்டிகை காலத்திற்கு முன்னதாக, மத்திய அரசு ஒரு அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொழிலாளர்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளித்துள்ளது. தொழிலாளர்களுக்கு, குறிப்பாக அமைப்புசாரா துறையில் (Unorganised Sector) உள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய அரசு VDA எனப்படும் மாறக்கூடிய அகவிலைப்படியை (Variable Dearness Allowance) திருத்தி, குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை உயர்த்தி அறிவித்துள்ளது. அதன் மூலம், தினம் தினம் அதிகரிக்கும் அன்றாடச் செலவுகளை சமாளிக்க தொழிலாளர்களுக்கு உதவி கிடைக்கும். 

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை

தொழிலாளர்களின் நிதிச்சுமையை குறைப்பதே மத்திய அரசின் இந்த அறிவிப்பின் நோக்கமாகும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

கட்டிடம் கட்டுதல், பொருட்களை ஏற்றுதல், இறக்குதல், வாட்ச் அண்ட் வார்டு, துடைத்தல், சுத்தம் செய்தல், வீட்டு பராமரிப்பு, சுரங்கம் மற்றும் மத்திய கோள நிறுவனங்களுக்குள் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தால் (Wage Rates) பயனடைவார்கள்.

New Wage Rates: புதிய விகிதங்கள் எப்போது அமலுக்கு வரும்?

- புதிய ஊதிய விகிதங்கள் அக்டோபர் 1, 2024 முதல் அமலுக்கு வரும். 
- இதற்கு முன்னர் ஏப்ரல் 2024 இல் இந்த விகிதங்களில் திருத்தம் செய்யப்பட்டது. 
- குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள், திறமையற்ற, சிறிய அளவில் திறன் கொண்ட, திறமையான மற்றும் அதிக திறன் கொண்ட (unskilled, semi-skilled, skilled, and highly skilled) என திறன் நிலைகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
- மேலும், ஊழியர்கள் வசிக்கும் பகுதிகளின் அடிப்படையிலும் இவை A, B மற்றும் C என பிரிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | EPS Pension சூப்பர் செய்தி: அதிரடியாக உயரும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்.... முக்கிய அப்டேட் இதோ

விகிதங்கள் எவ்வளவு உயர்ந்துள்ளன?

- விகித மாற்றத்திற்குப் பிறகு, "A" பகுதியில், கட்டுமானம், துடைத்தல், சுத்தம் செய்தல், பொருட்களை ஏற்றுதல், இறக்குதல், ஆகியவற்றில் பணிபுரியும் அன்ஸ்கில்ட் (திறனற்ற) தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.783 (மாதம் ரூ. 20,358) ஆக இருக்கும்.
- செமி-ஸ்கில்ட் (சிறிய அளவு திறன் கொண்ட) தொழிலாளர்களுக்கு ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.868 (ரூ. மாதம் ஒன்றுக்கு 22,568) ஆக இருக்கும்.
- ஸ்கில்ட் (திறமையான), எழுத்தர் மற்றும் வாட்ச் அண்ட் நார்ட்ஸ் தொழிலாளர்களுக்கான ஊதியம் ஒரு நாளைக்கு ரூ. 954 (மாதம் ரூ. 24,804) ஆக இருக்கும்.
- ஹைலி ஸ்கில்ட் (அதிக திறன் கொண்ட) தொழிலாளர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ. 1,035 (மாதம் ரூ. 26,910) ஆக இருக்கும்.

Variable Dearness Allowance

மத்திய அரசு (Central Government) மாறும் அகவிலைப்படியான VDA ஐ ஆண்டுக்கு இரண்டு முறை திருத்துகிறது. இவை ஏப்ரல் 1 மற்றும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன. தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (Consumer Price Index for industrial workers) ஆறு மாத சராசரி அதிகரிப்பின் அடிப்படையில் இந்த திருத்தம் செய்யப்படுகின்றது. துறை, பிரிவுகள் மற்றும் பகுதி வாரியாக குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் பற்றிய விரிவான தகவல் இந்திய அரசின் தலைமை தொழிலாளர் ஆணையரின் (மத்திய) இணையதளத்தில் (clc.gov.in) கிடைக்கும். 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் தீபாவளி பரிசு: அகவிலைப்படி உயர்வு, டிஏ அரியர்... விரைவில் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News