ஆர்பாட்டங்களுக்கு மத்தியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை...

ஜாமியா பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள தென்கிழக்கு டெல்லியின் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று (டிசம்பர் 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Dec 16, 2019, 09:17 AM IST
ஆர்பாட்டங்களுக்கு மத்தியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை... title=

ஜாமியா பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள தென்கிழக்கு டெல்லியின் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று (டிசம்பர் 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது!

ஞாயிற்றுக்கிழமை ஜாமியா பல்கலைக்கழகத்திற்கு அருகே வன்முறை திருப்பத்தை ஏற்படுத்திய, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் முடிவாக இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பினை துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக மக்களுக்கு தெரியபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., "டெல்லியின் தென்கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஓக்லா, ஜாமியா, நியூ பிரண்ட்ஸ் காலனி, மதான்பூர் காதர் பிராந்தியத்தின் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மூடப்படுகிறது. தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, பள்ளிகளை மூட வைக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான செய்திகளை படிக்க...

டெல்லி அரசு அறிவிப்பின் படி ஓக்லா, ஜாமியா, நியூ பிரண்ட்ஸ் காலனி, மதான்பூர் காதர் அருகே உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இன்று பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து 15-க்கும் மேற்பட்ட டெல்லி மெட்ரோ நிலையங்களின் நுழைவு, வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டன. இதில் டெல்லி கேட், பிரகதி மைதானம், ITO, IIT, GTB நகர், சிவாஜி ஸ்டேடியம், வசந்த் விஹார், முனீர்கா, RK புரம், சுக்தேவ் விஹார், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஓக்லா விஹார் மற்றும் ஜசோலா விஹார் நிலையங்கள் அடங்கும்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான செய்திகளை படிக்க...

இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலை, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) அனைத்து நிலையங்களிலும் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் திறக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. எல்லா நிலையங்களிலும் இயல்பான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, டெல்லியின் ஜாமியா நகர் அருகே ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) குடியுரிமை எதிர்ப்பு போராட்டக்காரர்களால் மூன்று பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. தீயைக் கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு விரைந்த நான்கு தீயணைப்பு டெண்டர்களும் எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டன. இந்த தாக்குதலில் இரண்டு தீயணைப்பு படையினர் காயமடைந்துள்ளதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

எனினும் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் மாணவர்கள் வன்முறையிலிருந்து தங்களை ஒதுக்கி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில்., "எந்தவொரு வன்முறை போராட்டத்திற்கும் தாங்கள் ஆதரவளிக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் "டெல்லியின் தெருக்களில் நடக்கும் வன்முறைகளில் எந்த ஜாமியா மாணவரும் ஈடுபடவில்லை. இவை ஜாமியா மாணவர்களின் உடையில் வன்முறையைத் தூண்டும் நோக்கத்தில் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது" என்று ஜாமியா மாணவர் சங்கமும் நிர்வாகமும் தெரிவித்துள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான செய்திகளை படிக்க...

இதனிடையே ஞாயிறு அன்று ஜாமியா பல்கலைக்கழகம் பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைத்த பின்னர் குளிர்கால விடுமுறையை அறிவித்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் பாரிய போராட்டத்தின் மத்தியில் குளிர்கால விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. கால அட்டவணையின்படி, பல்கலைக்கழகம் டிசம்பர் 16 முதல் - ஜனவரி 6, 2020 வரை அடைக்கப்பட்டுள்ளது.

Trending News