பாஜக இதுவரை மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பது பிரதமர் மோடிக்கே தெரியும், பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் ரகசிய கூட்டணி வைத்திருப்பதாகவும், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கட்சி கூட்டணி பலமற்ற கூட்டணி, ஆட்சி அமைக்க இயலாத கூட்டணி எனவும் பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது பிரதமர் மோடியின் கருத்திற்கு பதில் அளிக்கும் விதமாக சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்திர பிரதேச மாநில முன்னாள முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவிக்கையில்., "நடந்த முடிந்த 4 கட்ட தேர்தல்களில் பாஜக-விற்கு போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை., இதன் காரணமாகவே தற்போது புதிய யுக்தியுடன் களமிறங்கியுள்ளனர். நான்கு கட்ட தேர்தலில் மட்டும் அல்ல, 5 ஆண்டு ஆட்சியிலும் பாஜக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. நடைபெறும் தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கும் என்பது இயலாத ஒன்று" என தெரிவித்தார்.
Akhilesh Yadav, SP: He (PM Modi) is a 180 degree PM, he does just the opposite of whatever he says. He is the PM of only 1% of the population. So he has this issue that how those in the favour of social justice are taking the nation towards a change. https://t.co/kjvVh4MwV2
— ANI UP (@ANINewsUP) May 5, 2019
தொடர்ந்து பேசிய அவர்., SP-BSP கூட்டணி குறித்து விமர்சிக்க பாஜக-விற்கு தகுதி இல்லை. மக்களை ஏமாற்றும் கட்சி பாஜக தான். SP-BSP தேர்தலில் வெற்றி பெற்றால் என்ன செய்யவேண்டும் என்ற பட்டியலுடன் களம் காணுகின்றது. நாங்கள் தேர்வு செய்துவிட்டோம்., நாட்டி அடுத்த பிரதமர் யார், தேர்தலில் வெற்றி பெற போவது யார் என்பை தேர்வு செய்துவிட்டோம். நிச்சையம் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க மாட்டார் எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்திய மக்களில் 1% மக்களின் குரல்களுக்கு மட்டுமே மோடி பதில் அளித்துள்ளார். 180 டிகிரி கோணத்தில் மாறுப்பட்ட செயல்பாடு செய்து வரும் மோடி, கொடுத்த வாக்குறுதிகளை ஒருபோது நிறைவேற்றுவதில்லை. மாறாக கொடுத்த வாக்குறுதிகளுக்கு எதிர்மறையாகவே செயல்படுகின்றார் என தெரிவித்தார்.
முன்னதாக காங்கரஸ் கட்சியுடன் சமாஜ்வாதி மறைமுக கூட்டணி வைத்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை ஏமாற்றுவதாக மத்திய பிரதேச பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.