போபால்: சோனியா காந்தி மற்றும் ராகுல் பயணித்த விமானம் போபால் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து விமானம் போபால் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சில மணி நேரங்களுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் சோனியா காந்தியும், ராகுலும் கலந்து கொண்டனர்
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் சென்ற விமானம் செவ்வாய்க்கிழமை மாலை போபால் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் இலக்கு போன்ற விவரங்கள் கிடைக்கவில்லை.
சில மணி நேரங்களுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் சோனியா காந்தியும், ராகுலும் கலந்து கொண்டனர். அவசரமாக தரையிறக்கம் பற்றிய தகவல் கிடைத்ததும் நாங்கள் விமான நிலையத்திற்குச் செல்கிறோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஷோபா ஓசா கூறினார்.
Madhya Pradesh Congress leaders meet Sonia Gandhi and Rahul Gandhi at Bhopal airport after the aircraft carrying the Gandhis made an emergency landing at the airport pic.twitter.com/cyHXGEZiOI
— ANI (@ANI) July 18, 2023
மேலும் படிக்க - பெங்களூருவில் 2-வது நாளாக இன்று எதிர்க்கட்சிகளின் கூட்டம்
போபால் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று போபால் போலீஸ் கமிஷனர் ஹரிநாராயண் சாரி மிஸ்ரா பிடிஐயிடம் தெரிவித்தார். இரவு 9.30 மணியளவில் விமானம் புறப்பட்டுச் சென்றதாக மிஸ்ரா கூறினார்.
புதிய கூட்டணியான இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணிக்கு (Indian National Developmental Inclusive Alliance (INDIA)) அழைப்பாளராக நியமிக்கப்படாததால், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் இருந்து சீக்கிரமே திரும்பி வந்துவிட்டார் என்று பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்த நிதீஷ் குமாரின் JD(U), முன்னாள் துணை முதல்வரை 'அபத்தமான அறிக்கைகளை வெளியிடுபவர் மற்றும் அவரது கட்சிக்குள் கூட பெரிதாக எடுத்துக் கொள்ளப்படாதவர்' என்று விமர்சித்தது.
எதிர்கட்சிகள் கூட்டம் பற்றி கிண்டல் செய்த பிஜேபி தலைவர் சுஷில் குமார் மோடி, இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியின் கன்வீனர் ஆகாதது குறித்த அதிருப்தியால் தான், நிதீஷ் குமார் செய்தியாளர் சந்திப்பைத் தவிர்த்தார் என்று கூறினார்.
மேலும் படிக்க | மோடி vs யார்? எதிர்க்கட்சிகள் கூட்டணி எடுக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன?
பெங்களூரில் இருந்து குமார் முன்கூட்டியே திரும்பியதை, கடந்த மாதம் நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நடவடிக்கையுடன் அவர் ஒப்பிட்டார்.
பாட்னாவில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு ஆம் ஆத்மி பிரதிநிதிகள் செய்தியாளர் சந்திப்பைத் தவிர்த்துவிட்டனர் என்பதோடு, மத்திய அரசின் அவசரச் சட்டம் விவகாரத்தில், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவை உறுதி செய்யாததற்காக காங்கிரஸ் கட்சி மீது மனத்தாங்கலையும் ஆம் ஆத்மி கட்சி வெளிப்படுத்தியது.
நிதீஷ் குமார் தவிர, செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளாதவர்களில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ், பீகார் தற்போதைய துணை முதல்வர் ஆகியோரும் அடங்குவார்கள்.
பீகார் அரசியலில் முக்கியமான மூன்று பேரும், ஒரே விமானத்தில் பட்னா திரும்பி, அவர்களிடம் கருத்து கேட்க காத்திருந்த செய்தியாளர்களை சந்திக்காமல் விரைந்து தத்தமது வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ