மேலும் ஒரு கொரோனா வழக்கு; இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தாக்கம்!

அண்மையில் டெல்லியில் ஒரு கொரோனா வழக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது.

Last Updated : Mar 6, 2020, 02:05 PM IST
மேலும் ஒரு கொரோனா வழக்கு; இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தாக்கம்! title=

அண்மையில் டெல்லியில் ஒரு கொரோனா வழக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது.

தாய்லாந்து மற்றும் மலேசியாவிற்கு அண்மையில் பயணம் கொண்டு இந்தியா திரும்பிய டெல்லி நபருக்கு தற்போது கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த வழக்கினை அடுத்து தற்போது இந்தியாவில் கோரோனா வைரஸ் பாதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது.

குறித்த நபர் டெல்லியின் உத்தம் நகரை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஈரானுக்குச் சென்ற காசியாபாத்தைச் சேர்ந்த ஒருவர் வியாழக்கிழமை நாவல் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியானது.  இதனையடுத்து தற்போது டெல்லி உத்தம் நகரில் மேலும் ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது டெல்லி-NCR-ல் பதிவாகியுள்ள மொத்த கொரோனா வைரஸ் வழக்குகள் எண்ணிக்கை நான்காக (டெல்லியில் இருந்து இரண்டு, காசியாபாத் மற்றும் குர்கானில் தலா ஒன்று) அதிகிரித்துள்ளது.

புதன்கிழமை வரையிலும், 16 இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் உட்பட 29 பேர் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தனர். இந்த பட்டியலில் கடந்த மாதம் கேரளாவிலிருந்து நாட்டில் முதல் மூன்று வழக்குகள் இடம்பெற்றன. எனினும் இந்த மூவரும் சிகிச்சைக்கு பின்னர் நலம் பெற்று வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் 11 தனி அறைகள் மற்றும் தனிமை வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், தேவைப்படும் போது அறைகள் மற்றும் வசதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசாங்கம் முழு தயார் நிலையில் உள்ளது. வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டவர்கள் ஒற்றை குடியிருப்பு அறைகளில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பயத்தின் மத்தியில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வியாழக்கிழமை தேசிய தலைநகரில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அறிவித்திருந்தார். அதேப்போல் டெல்லியில் உள்ள கேந்திரியா வித்யாலயாக்களின் முதன்மை வகுப்புகளும் மார்ச் 31 வரை மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News