ISRO SOLAR MISSION ADITYA-L1: சந்திரயான்-3 -இன் வெற்றி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) உற்சாகத்தை அதிகரித்துள்ளது. இந்தியாவின் எதிர்கால நோக்கங்கள் இப்போது நிலவுக்கு அப்பால் விரிவடைந்துள்ளன. எனினும், இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. சூரியனின் ரகசியங்களை அறிய இந்திய விஞ்ஞானிகள் தற்போது தயாராகி வருகின்றனர். இதற்காக இஸ்ரோ விரைவில் ஆதித்யா எல்-1 (ADITYA-L1) செயற்கைகோளை விண்ணில் செலுத்த உள்ளது. சூரியனின் ரகசியங்களை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 -ஐ செப்டம்பர் 2 ஆம் தேதி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முழு ஏற்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்துள்ளனர்.
ஆதித்யா எல்-1: செலுத்தலுக்கு தயாராக உள்ளது
நாட்டின் முதல் சன் மிஷன் ஆதித்யா எல்-1 பற்றிய சமீபத்திய அப்டேட் என்னவென்றால், அதன் செலுத்தலுக்கான முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள் ஏவப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி மையத்தை சென்றடைந்துள்ளது. இந்த செலுத்தலுக்கு பிறகு, இந்தியா உலக அளவில் மற்றொரு பெரிய சாதனையை செய்துள்ள நாடுகளின் பட்டியலில் சேரும் என்று கூறப்படுகிறது.
ஆதித்யா L-1 ஒரு வரமாக இருக்கும்
இஸ்ரோவின் இந்த பணி சூரியன் தொடர்பான தகவல்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், விண்வெளியில் பயணிக்கும் செயற்கைக்கோள்களின் பாதுகாப்பிற்கும் வரும் காலங்களில் ஒரு வரமாக இருக்கும் என ஆதித்யா எல்-1 திட்டத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் புள்ளிகள் (Sun Spots), சூரிய ஜ்வாலைகள் (Solar Flair) மற்றும் சூரிய புயல்கள் உட்பட பல செயல்பாடுகள் சூரியனை சுற்றி நிகழ்கின்றன என்றும் அவை கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்கு ஆதித்யா எல்-1 மிஷன் மிகவும் உதவியாகவும் ஏற்றதாகவும் இருக்கும் என அவர்கள் கருதுகிறார்கள்.
மேலும் படிக்க | சூர்யா மிஷன்: எந்த ராகசித்தை இஸ்ரோ அறிய ADITYA-L1 மிஷன்? இதோ விடை
ஆதித்யா எல்-1 விண்கலத்தின் மூலம் விண்வெளியில் வானிலையின் இயக்கவியலை எளிதாக அறிந்து கொள்ள முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர, சூரியனின் வெப்பநிலை மற்றும் சூரிய புயல்கள் மற்றும் உமிழ்வுகள் மற்றும் பூமியில் விழும் புற ஊதா கதிர்கள் பற்றிய ஆய்வின் அடுத்த நிலைக்கு செல்லவும் இது உதவியாக இருக்கும். இது மட்டுமின்றி, ஓசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்வதும் இதனால் சற்று எளிதாக இருக்கும்.
ஆதித்யா எல்-1 பூமியிலிருந்து சூரியனை நோக்கி 1.5 மில்லியன் கிலோமீட்டர் தூரம் பயணித்து சூரியனின் ரகசியங்களை வெளிக்கொணர முயற்சிக்கும். சூரியனைப் பற்றிய பல வகையான தரவுகளை L-1 சேகரிக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதன் மூலம், தீங்கு விளைவிக்கும் சூரியக் காற்று மற்றும் புயல்கள் பற்றிய தகவல்களைப் பெற்று, அவற்றுக்கான முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட முடியும்.
புற ஊதா கதிர்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்
சூரியனில் இருந்து அதிக புற ஊதாக் கதிர்கள் வெளிவருகின்றன. இது மனிதர்களின் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மற்ற வழிகளிலும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும். L-1 இன் கீழ் உள்ள தொலைநோக்கி (SUIT) மூலமாக 2000-4000 ஆங்ஸ்ட்ராம் அலைநீளத்தின் புற ஊதாக் கதிர்களைப் படிக்க திட்டம் உள்ளது. UV கதிர்கள், குறிப்பாக இவ்வளவு பெரிய அளவில் இதற்கு முன் ஆய்வு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆதித்யா எல்1 வெற்றி இந்தியாவின் சரித்திர சாதனையாக இருக்கும்
குறிப்பிடத்தக்க வகையில், ஆதித்யா என்பது சூரியனின் ஒரு பெயர் ஆகும். அதே சமயம் எல்-1 என்பது விண்வெளியில் சூரியனின் ஒவ்வொரு செயலையும் ஆய்வு செய்யக்கூடிய இடமாகும். முன்னதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் செயற்கைக்கோள்கள் மட்டுமே இந்த முக்கியமான இடத்தை அடைய முடிந்தது. ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பின்னர், இந்த சரித்திர சாதனையை படைக்கும் மூன்றாவது நாடாக இந்தியா பெருமையுடன் இந்த பட்டியலில் சேரும்.
மேலும் படிக்க | நிலவை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய தயார்: ஆதித்யா எல்1... இஸ்ரோவின் அடுத்த அதிரடி!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ