மத்தியப் பிரதேசத்தில் உள்ள சத்தர்பூர் ரயில் நிலையத்திற்கு சென்ற 16 வயது சிறுவன் அங்குள்ள ரயில் இன்ஜின் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த சிறுவனின் பெயர் சுஹைல் மன்சூரி என சத்தர்பூர் ரயில் நிலைய மாஸ்டர் சுபாங்க் படேல் தெரிவித்துள்ளார். செல்ஃபி எடுக்க முயன்றபோது உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதே சிறுவன் உயிரிழந்ததற்குக் காரணமென ரயில்வே பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | செங்கல்பட்டு அருகே செல்பி மோகத்தால் ரயில் மோதி மூன்று இளைஞர்கள் பலி
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்தின் கதவை கற்களால் அடித்து சேதப்படுத்தினர். மேலும் ஸ்டேஷன் மாஸ்டரையும் தாக்கி, அவரது பை மற்றும் கைக்கடிகாரத்தை பறித்துச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இளைஞர்களை ஆட்கொண்டுள்ள செல்ஃபி மோகத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர் கதையாகிறது. இன்று காலை செங்கல்பட்டு ரயில் நிலைய தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற 3 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர். பள்ளி கல்லூரி மாணவர்கள், புதுமணத் தம்பதிகள் என இளம் வயதினர் பலரும் செல்ஃபி மோகத்தால் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக எடுக்கப்படும் ஆபத்தான செல்ஃபிகள் உயிரைக் குடிப்பது தொடர் கதையாகிறது.
மேலும் படிக்க | செல்பி எடுக்க முயன்றபோது அணையில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலி!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR