மன நலம் பாதித்த முதியவர் அடித்து கொலை... இஸ்லாமியர் என்று நினைத்து தாக்கிய நபருக்கு வலைவீச்சு!

மத்திய பிரதேசத்தில் இஸ்லாமியர் என சந்தேகித்து மன நலம் பாதித்த நபரை ஒருவர் கொடூரமாக அடித்து கொல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 6, 2022, 04:43 PM IST
  • முதியவர் ஒருவர் அடித்துக்கொள்ளப்பட்ட வீடியோ வைரல்
  • தாக்குதல் நடத்தியவர் பெயர் தினேஷ் குஷ்வாஹா என தெரியவந்துள்ளது
மன நலம் பாதித்த முதியவர் அடித்து கொலை... இஸ்லாமியர் என்று நினைத்து தாக்கிய நபருக்கு வலைவீச்சு! title=

மத்திய பிரதேச மாநிலம் நீமச் மாவட்டத்தில் மானசா நகரில், முதியவர் ஒருவர் அடித்துக்கொள்ளப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் அமர்ந்துள்ளார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

பின்னர் அவ்வழியே வந்த நபர் ஒருவர் முதியவரிடம் பேசுகிறார். அப்போது, 'உன் பெயர் முகமது தானே?' என கேட்கிறார். ஆனால் முதியவர் பதில் கூற முடியாமல் தடுமாறுகிறார். பின்னர் 'உன் பெயரை ஒழுங்காக சொல், உன் ஆதார் அட்டையை காட்டு' என கேட்கப்படுகிறார்.

இதற்குள் முதியவரை அந்த இளைஞர் தாறுமாறாக தாக்குகிறார். பயந்துபோன முதியவர் அந்த இளைஞருக்கு பணம் தருவதாக கூறி சமாதானம் செய்ய முயல்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து தாக்கப்பட்டார்.

 

மேலும் படிக்க | Beat the Heat: கோடையை கூலாக்கும் சூப்பர் சர்பத்துகள்

இளைஞரது மிருகத்தனமான செயல் வீடியோ பதிவில் பதிவாகியுள்ளது. மேலும் அந்த முதியவர் அடுத்துக்கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், இறந்த முதியவர் பெயர் பன்வார்லால் ஜெயின். ரத்லம் மாவட்டத்தை சேர்ந்த அவர் கடந்த மே 15-ஆம் தேதி ஒரு நிகழ்ச்சிக்காக ராஜஸ்தான் சென்றபோது குடும்பத்தாரைவிட்டு அவர் பிரிந்து தொலைந்துவிட்டதாக புகார் ஒன்று பதிவாகியுள்ளது. 

அப்புகாரின் பெயரில் பன்வார்லாலின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை தேடி வந்தோம். இந்நிலையில் நேற்று அவரது உடல் சாலையோரம் கிடந்ததாக தகவல் கிடைத்தது. மேலும், அவர் இருக்கும் வீடியோ ஒன்றை ஜெயினின் குடும்பத்தினர் எங்களிடம் காண்பித்தனர்." எனக் கூறுனார். 

மேலும், இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தாக்குதல் நடத்தியவர் பெயர் தினேஷ் குஷ்வாஹா என தெரியவந்துள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே, காங்கிரஸ் கட்சியினர் இச்சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்றபடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க | சர்வ நோய்களையும் விரட்டும் வெற்றிலை; தினமும் கண்டிப்பா போட்டுக்கோங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News