புதுடெல்லி: இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா புதன்கிழமை (ஜனவரி 19) அமெரிக்கா செல்லும் பல விமானங்களை ரத்து செய்வதாக என தெரிவித்துள்ளது. புதன்கிழமையன்று Delhi-JFK-Delhi மற்றும் Mumbai-EWR-Mumbai விமானங்களை இயக்க முடியாது என்று விமான நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டதன் மூலம் பயணிகளுக்கு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 5ஜி தகவல்தொடர்புகளை பயன்படுத்துவதே விமான சேவை ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என கூறப்படுகிறது.
5G நெட்வொர்க் (5G Network) உள்ளதன் காரணமாக சில முக்கியமான விமானக் கருவிகள் செயலிழக்கச் செய்யக்கூடும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் 5G தகவல்தொடர்புகளைப் பயன்படுத்துவதால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கான விமான சேவை 19 ஜனவரி 2022 முதல் குறைக்கப்பட்டன/திருத்தப்பட்ட விமானங்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.இருப்பினும், மற்றொரு ட்வீட்டில், புதன்கிழமை AI103 மூலம் டெல்லியில் இருந்து வாஷிங்டன் DC க்கு விமானம் இயக்கப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா மட்டுமல்ல - பாதுகாப்புக் கவலைகளைத் ஏற்படுத்தியுள்ள 5G வயர்லெஸ் அறிமுகத்திற்கு முன்னதாக, முக்கிய சர்வதேச விமான நிறுவனங்கள் செவ்வாயன்று அமெரிக்காவிற்கான விமானங்களை மறுசீரமைக்க அல்லது ரத்து செய்ய முடிவெடுத்தன.
ALSO READ | 5G in India: விரைவில் 5ஜி இணைய சேவை பெற உள்ள 13 நகரங்கள்..!!
5G குறுக்கீடு, விமானத்தின் உயர அளவீடுகளை பாதிக்கலாம் என்று பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) எச்சரித்துள்ளது. சில ஜெட் விமானங்கள், மோசமான வானிலையில் தரையிறங்கும் போது, எவ்வலவ்ய் உயரத்தில் விமான பறக்கிறது என்பதை கணித்து தரையிறக்கும் தொழில்நுட்பம், முக்கிய பங்கு வகிக்கிறது. AT&T மற்றும் Verizon விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள சில 5G டவர்களை இயக்குவதை தாமதப்படுத்துவதாக அறிவித்துள்ள போதிலும், பல விமான நிறுவனங்கள் இன்னும் விமானங்களை ரத்து செய்துள்ளன. வயர்லெஸ் அறிவிப்புகளை அடுத்து FAA புதிய முறையான வழிகாட்டல்களை வழங்காத வரை மேலும் ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக மற்றவர்கள் கூறினர்.
உலகின் மிகப்பெரிய போயிங் 777 ஆபரேட்டரான துபாயின் எமிரேட்ஸ், 5ஜி வயர்லெஸ் சேவைகளைப் தொடக்குவதாக திட்டமிட்ட தேதியான ஜனவரி 19 முதல் அமெரிக்காவில் உள்ள ஒன்பது இடங்களுக்கான விமானங்களை நிறுத்துவதாகக் கூறியது. நியூயார்க்கின் JFK, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் வாஷிங்டன் DC ஆகிய இடங்களுக்கு எமிரேட்ஸ் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும். ஜப்பானின் இரண்டு பெரிய விமான நிறுவனங்களான, ஆல் நிப்பான் ஏர்வேஸ் (All Nippon Airways) மற்றும் ஜப்பான் ஏர்லைன்ஸ் (Japan Airlines), போயிங் 777 விமானங்களை குறைப்பதாக தெரிவித்தன.
ALSO READ | Las Luminarias: ஸ்பானிஷ் திருவிழாவில் ‘தீ’ குளிக்கும் குதிரைகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR