5 மாநிலத் தேர்தல் பலப்பரீட்சை... நாளை வாக்கு எண்ணிக்கை....

ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ண இருக்கின்ற நிலையில், மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 10, 2018, 09:52 AM IST
5 மாநிலத் தேர்தல் பலப்பரீட்சை... நாளை வாக்கு எண்ணிக்கை.... title=

ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ண இருக்கின்ற நிலையில், மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது! 

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் முடிவுகளை இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்படும் என  தேர்தல் ஆணைய தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் BJP ஆட்சி நடைபெறுவதால் அங்கு ஆட்சியைத் தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அண்மையில் வெளியான கருத்துக் கணிப்புகளில், ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகவும், மத்தியப் பிரதேசம் - சட்டீஸ்கரில் இழுபறி நிலை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில், தற்போது பா.ஜ.க.வின் ஆட்சியில் உள்ள மத்தியப் பிரதேசம். ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸின் கொடி பறக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஏ.பி.பி. மற்றும் டுடேஸ் சாணக்யா கருத்துக்கணிப்புகள் காங்கிரசின் கரம் ஓங்கும் என குறிப்பிடுகின்றன. ரமண்சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஸ்கரிலும்,  காங்கிரசுக்கு வெற்றி முகம் தெரிவதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. அதேநேரத்தில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, வாக்குகளை பிரித்திருக்கும் என்பதால், அது பாஜகவுக்கு சாதகமாக அமையலாம் எனவும் பார்க்கப்படுகிறது.

தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி பெரும்பான்மை பலத்துடன் வாகை சூடும் என அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் ஒரு சேர தெரிவிக்கின்றன.  வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸின் ஒரே கோட்டையான மிசோரமும், மாநில கட்சிகளிடம் பறிபோக வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

 

Trending News