மனிதனின் வயிற்றுக்குள் 5 கிலோ நாணயங்கள்

மனிதனின் வயிற்றுக்குள் 263 ரூபாய் நாணயங்கள் மற்றும் பிளேடு, ஊசி ஆகிய பொருட்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்கம்.

Last Updated : Nov 27, 2017, 12:37 PM IST
மனிதனின் வயிற்றுக்குள் 5 கிலோ நாணயங்கள் title=

மத்திய பிரதேசம் சட்னா மாவட்டத்தில் சோஹவல் என்ற ஊரை சேர்ந்த முகமது மக்சூட் (32 வயது). கடந்த 18-ம் தேதி சஞ்சய் காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு வயிறு வலிப்பதாக சிகிச்சைக்கு வந்தார். 

பின்னர், அவரை பரிசோதித்ததில் அவரின் வயிற்றுக்குள் ருபாய் நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தனர். 

அப்போது, அவர் வயிற்றில் இருந்து 263-நாணயங்கள் மற்றும் 12-பிளேடுகள், 4-ஊசிகள், கண்ணாடி துண்டுகள் போன்ற 5 கிலோ எடைக்கொண்ட பொருட்கள் எடுக்கப்பட்டனர். 

இது பற்றி மருத்துவர்கள் கூறுகையில்; இவர் சரியான மன நிலை கொண்டவராக தெரியவில்லை. இவற்றை அவர் யாருக்கும் தெரியாமல் விழுங்கி இருக்கலாம். இவர் இப்போது தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் தெரிவித்தனர்.

Trending News