லக்னோ விராட் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விராட் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்!

Last Updated : Jun 19, 2018, 02:41 PM IST
லக்னோ விராட் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி! title=

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விராட் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விராட் ஓட்டலில் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தில் குழந்தையுடன் இருந்த தாய் ஒருவரும் உடல் கருகி பலியாகியுள்ளார்.

தீ விபத்திற்கான காரணமாக ஓட்டலின் சமையல் அறையில் ஏற்பட்ட காஸ் கசிவாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தின் காரணமாக ஓட்டலில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தீ சுவாலை உறுவாகியுள்ளது. இதனால் அக்கம் பக்கத்திலும் தீ வேகமாக பரவியுள்ளது. மேலும் ஓட்டலின் கட்டிடம் பெரிதும் சேதம் அடைந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சம்பவயிடத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கு தேவையாக அனைத்து நடவடிக்கைகளும் முழுமூச்சில் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending News