2024 லோக்சபா தேர்தல்: எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு “INDIA” என பெயர்! பாஜக மாஸ்டர் பிளான்!

Bengaluru Opposition Meeting: 2024 லோக்சபா தேர்தலில் பாஜவுக்கு எதிராக ஒன்றுக்கூடும் எதிர்க்கட்சிகள். தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்க்க எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைப்பு.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 18, 2023, 05:18 PM IST
  • பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்க கூட்டணி என பெயர்.
  • வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வரைபடத்தை எதிர்க்கட்சிகள் தயாரிக்கத் தொடங்கியுள்ளன.
  • பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சியின் கூட்டத்தில் காங்கிரஸ் உள்பட 26 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
2024 லோக்சபா தேர்தல்: எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு “INDIA” என பெயர்! பாஜக மாஸ்டர் பிளான்! title=

பெங்களூருவில் நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் இரண்டாவது நாள் கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் உள்பட 26 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 2024 பொதுத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு "INDIA" என பெயர்:
பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ள எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்க கூட்டணி (Indian National Developmental Inclusive Alliance) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது எதிர்க்கட்சிகளின் கூட்டணியை இனி யுபிஏ (UPA) என்று அழைக்காமல் இந்தியா (INDIA) என்று அழைக்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதன்மூலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (United Progressive Alliance) என்பதிலிருந்து இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்கிய கூட்டணி என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பெயர் மாற்றம் குறித்தத் தகவலை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க - கூட்டத்தில் கோபப்பட்ட பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார்! எம்.எல்.ஏக்களுக்கு 2024 தேர்தல் வார்னிங்!

பாஜகவை எதிர்க்க தயாராகும் எதிர்க்கட்சிகள்:
வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வரைபடத்தை எதிர்க்கட்சிகள் தயாரிக்கத் தொடங்கியுள்ளன. பெங்களூருவில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் இரண்டாம் நாள் கூட்டத்தில் காங்கிரஸ் உட்பட மொத்தம் 26 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் குழுவுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்போது இந்த குழு இந்தியா என்ற பெயரில் அழைக்கப்படும். இந்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும்.

நாட்டைக் காப்பாற்ற நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்: கார்கே
எதிர்க்கட்சிகளின் செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதனை அறிவித்தார். அவர் பேசுகையில், "எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக்காக 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அதற்காக விரைவில் அலுவலகம் திறக்கப்படும். இதுக்குறித்த விவரம் மும்பையில் நடைபெறவுள்ள அடுத்த எதிர்க்கட்சிகளின் கூடத்தில் அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் படிக்க - பொது சிவில் சட்டம்... வலியுறுத்தும் பிரதமர் மோடி... எதிர்க்கும் இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்!

அமலாக்கத்துறை (Enforcement Directorate), சிபிஐ (CBI) போன்ற ஜனநாயகத்தின் அனைத்து நிறுவனங்களையும் பாஜக அழித்துவிட்டது என்று கார்கே கூறினார். எங்களுக்குள் அரசியல் வேறுபாடுகள் உள்ளன. ஆனால் நாட்டைக் காப்பாற்ற நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம் என்றார். 

2024ல் இணைந்து போராடி வெற்றியின் பலனை அடைவோம்:
முன்னதாக பாட்னாவில் 16 கட்சிகள் கலந்து கொண்டோம். இன்றைய கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்து கொண்டன. இதை பார்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணி (National Democratic Allianc) 36 கட்சிகளுடன் கூட்டம் நடத்துகிறது. அவை எந்த கட்சி என்று தெரியவில்லை. அவை பதிவு செய்யப்பட்டதா இல்லையா? எனக் கேள்வி எழுப்பினார். 

இன்று நாங்கள் இங்கு கூடியிருப்பது எங்கள் சொந்த நலனுக்காக அல்ல. நாட்டைக் காப்பாற்றுவதற்காக. மத்திய அரசின் தோல்விகளை அம்பலப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அனைவரும் ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி. 2024ல் இணைந்து போராடி வெற்றியின் பலனை அடைவோம் என்றார்.

மேலும் படிக்க - பெங்களூருவில் 2-வது நாளாக இன்று எதிர்க்கட்சிகளின் கூட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News