163 பழங்குடியின பெண்கள் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனராக தேர்வு!

இந்தியாவில் முதல் முறையாக பழங்குடியின பெண்கள் மகாராஷ்டிர அரசு போக்குவரத்து கழக டிரைவர் வேலைக்கு தேர்வு!!

Last Updated : Aug 24, 2019, 10:05 AM IST
163 பழங்குடியின பெண்கள் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனராக தேர்வு! title=

இந்தியாவில் முதல் முறையாக பழங்குடியின பெண்கள் மகாராஷ்டிர அரசு போக்குவரத்து கழக டிரைவர் வேலைக்கு தேர்வு!!

புனே: மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்துக் கழகம் (MSRTC) பேருந்துகளை ஓட்ட மகாராஷ்டிரா அரசு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த ஓட்டுனர் திட்டத்திற்கு 163 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இந்த முயற்சியை நேற்று திறந்து வைத்தார். 

மகாராஷ்டிர மாநிலத்தில் பழங்குடியின பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய செய்ய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கிய திட்டம், பழங்குடியின பெண்களுக்கு கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பு வழங்குவது ஆகும். அதன்படி, சமீபத்தில் மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், 163 பழங்குடியின பெண்களை தேர்வு செய்துள்ளது. போக்குவரத்து கழகத்தின் இந்த முன்முயற்சியை முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தொடங்கி வைத்தார். 

தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 163 பெண்களுக்கு உரிய டிரைவிங் பயிற்சி வழங்கப்பட்டு, அதன்பின்னர் அரசு பேருந்துகளை ஓட்டும் டிரைவர்களாக பணியில் அமர்த்தப்படுவார்கள். இதையடுத்து, இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதீபா பாட்டீல்; “பெண் டிரைவர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நீண்ட தொலைவுக்கு பெண் டிரைவர்களை அனுப்ப கூடாது. இரவு நேரத்தில் சில இடங்களில் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், தங்குவதற்கு பாதுகாப்பான இடம் வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். 

 

Trending News