உலக பூமி நேரத்தை முன்னிட்டு நேற்று இரவு ஒரு மணி நேரம் அத்தியாவசிய மின் விளக்குகளை அணைக்குமாறு மத்திய சுற்றுச்சுசூல் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தானும் அவ்வாறு செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.
Lights turned off at India Gate in #Delhi to observe #EarthHour pic.twitter.com/XqT5J6q0xL
— ANI (@ANI) March 24, 2018
இதையடுத்து, நேற்று தலைநகர் டெல்லியில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் வரலாற்று நினைவிடங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்னொளி விளக்குகள் சுமார் ஒரு மணி நேரம் வரை அணைக்கப்பட்டது. இதேபோல் மும்பையில் உள்ள கேட் வே ஆஃப் இந்தியா பகுதியிலும் விளக்குகள் அணைக்கப்பட்டன. இந்தியாவைத் தவிர ஆஸ்திரேலியா, அமெரிக்கா, எகிப்து மற்றும் பிரான்ஸ் நாடுகளிலும் இந்த பூமி நேரம் கடைபிடிக்கப்பட்டது.
Lights turned off at Chhatrapati Shivaji Maharaj Terminus building in #Mumbai to observe #EarthHour pic.twitter.com/4OclLMoC2K
— ANI (@ANI) March 24, 2018
இது குறித்து மத்திய சுற்றுச்சுசூல் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் வெளியிட்ட அறிக்கையில்..!
மார்ச் 24 (சனிக்கிழமை) அன்று, நாம் பூமி நேரம் கொண்டாடும் விதமாக, இயற்கை இழப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து, நான் என் அலுவலகத்தில் அனைத்து அத்தியாவசிய விளக்குகளையும் 8:30 இருந்து 9:30 மணிவரையில் ஒருமணிநேரம் அணைத்துவிடப் போகிறேன். நீங்களும் இவ்வாறு செய்யவேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.
இதற்காக உருவாக்கப்பட்டதுதான் ''கிவ் அப் டு கிவ் பேக்'' மற்றும் ''கனக்ட் டூ எர்த்'' என பலம் மிக்க சுலோகம்.
நுகர்வு கலாச்சாரத்திலிருந்து மாறுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் ஒரு வாய்ப்பாக இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நமது செயல்பாடுகளில் இருந்து நிலையானவற்றிற்கு மாறுவதற்குமான இத்தருணத்தை ஒரு வாய்ப்பாக கருத வேண்டும்.
பொருளாதார நடவடிக்கைகளுக்கு உதவும் விதமாகவும் செலவுகளைக் குறைக்கவும் கூட இந்த நடவடிக்கை அமைய வேண்டும்.இயற்கையின் நீடித்த பயன்களைப் பெறுவதற்கான சிறந்த முடிவுகளை எடுப்பதற்கான ஒரு சிறந்த தேர்வாக ''கிவ் அப்'' அமைந்துள்ளது.
பசுமை நற்செயல்களின் இயக்கத்தின் பல்வேறு பணிகளின் ஒரு பகுதிதான் பூமி நேரம் எனப்படுகிறது. இதில் ஒவ்வொருவரும் தங்கள் சிறு பங்களிப்பிற்காவது பொறுப்பேற்கவேண்டும். சுற்றுச்சூழலையும் பூமியையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் தன்னார்வ பசுமை இயக்கங்கள் ஈடுபடவேண்டும்.
கார் பயன்பாட்டை பெருமளவில் குறைத்து வேலைக்குச் செல்ல சைக்கிளைப் பயன்படுத்துவது. பிளாஸ்டிக் பயன்படுத்தை நிறுத்துவது ஒரு இளஞ்செடிகளை நடுவதும், வீணான கழிவுகளை பிரிப்பததும் என நமது மக்கள், ஒவ்வொரு நாளும் பசுமை நற்செயல்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்.
உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் சமுதாயம் வாழ்வதற்கு உகந்த சுற்றுச்சூழலுக்கான மிகப்பெரிய அடித்தளமாக பூமி நேரம் இருக்கிறது. அவர்கள் பருவநிலை மாற்றங்களுக்கு எதிராக ஒரு மணிநேரம் அத்தியவசிய மின் விளக்குகளை நிறுத்தும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.
''இயற்கை இந்தியா''வுக்கான வேர்ல்ட் வைட் ஃபண்ட்டின் ஒரு உலகளாவிய தொடக்கம்தான் பூமி நேரம். உலகெங்கிலும் உள்ள 178 நாடுகளும் காலனி நாடுகளும் இந்நிகழ்வில் பங்கேற்க பதிவுசெய்து கொண்டுள்ளன.
இந்த ஆண்டு மார்ச் 24 சனிக்கிழமை இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணிவரை பூமிநேரம் அனுசரிக்கப்படுகிறது. நாட்டு மக்கள் இதில் பங்கேற்க வேண்டுகிறேன்.'' இவ்வாறு சுற்றுச்சூழல் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்..!