"டிஜிட்டல் புரட்சியை நோக்கி இந்தியா சென்றுக் கொண்டிருப்பதால் இளைஞர்களின் எண்ணங்கள் நிறைவேறும்" என பிரதமர் மோடி அவர்கள் சிங்கப்பூரில் தெரிவித்துள்ளார்!
5 நாள் சுற்றுப்பயணமாக தெற்கு ஆசிய நாடுகளுக்கு கடந்த மாதம் 25-ஆம் நாள் இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் ஒருபகுதியாக இன்று சிங்கப்பூர் சென்றுள்ள அவர் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அவர் சிங்கப்பூர், மலேசிய தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
முன்னதாக மலேசிய பிரதமர் மகாதீர் முகமதுவை சந்தித்து பேசிய அவர் இந்தியாவிற்கும் மலேசியாவிற்குமான நட்புறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசித்தார். மலேசியாவை அடுத்து சிங்கப்பூர் சென்ற அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரை வரவேற்று இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பயணத்தின் ஒரு பகுதியாக மாலை, சிங்கப்பூர் மெரினா பே சாண்ட்ஸ் கருத்தரங்க மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கண்காட்சியை பார்வையிட்டார். இதனையடுத்து தொழில் முனைவோருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பிரதமரை வரவேற்கும் விதமாக இந்திய கலாச்சார நடனங்களுடன் கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி டிஜிட்டல் புரட்சியை நோக்கி இந்தியா சென்றுக் கொண்டிருப்பதால் இளைஞர்களின் எண்ணங்கள் நிறைவேறும், எனவே இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அவர் தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
#TopStory Prime Minister Narendra Modi to deliver keynote address at the Shangri-La Dialogue in #Singapore today. (File pic) pic.twitter.com/gxsjeyaIeF
— ANI (@ANI) June 1, 2018
இந்நிலையில் இன்று சிங்கப்பூர் பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தும் மோடி அவர்கள், பசுபிக் நாடுகளின் பாதுகாப்பு சார்ந்த ஷாங்கிரி லா கருத்தரங்கிலும் உரையாற்ற உள்ளார். இந்த கருத்தரங்கில் ஆசிய பசிபிக் பிராந்தியங்களைச் சேர்ந்த 28 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் ராணுவ தலைவர்கள் பங்கேற்று பிராந்திய பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.