புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு!

இரண்டு நாட்கள் நடந்த புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரை காலவரையின்றி ஒத்திவைத்தார் சபாநாயகர்! 

Last Updated : Jun 5, 2018, 02:29 PM IST
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு!  title=

இரண்டு நாட்கள் நடந்த புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரை காலவரையின்றி ஒத்திவைத்தார் சபாநாயகர்! 

2018-19 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யவும், இது தொடர்பான விவாதங்கள் மற்றும் மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக, நேற்று மீண்டும் புதுச்சேரி சட்டப்பேரவை கூடியது.

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி கூடியது. அன்று அரசின் மூன்று மாத செலவீனங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்திருந்தார். 

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று மீண்டும் துவங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று ஏற்பட்ட அமளியால் மீதும் பட்ஜெட் கூட்டத்தொடரை ஒத்தி வைத்தனர். இதையடுத்து, மீண்டும் இன்று துவங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமலேயே புதுச்சேரி சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் நடந்த புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத் தொடரை காலவரையின்றி ஒத்திவைத்தார் சபாநாயகர். 

 

Trending News