பாகிஸ்தானைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒன்றில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் செய்தியை தொகுத்து வழங்கியது மக்களிடையே பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
சமீபத்தில், திருநங்கைகள் தங்களுடைய பாலின அடையாளத்தை முடிவு செய்து கொள்ளும் அதிகாரம், பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை உயர்த்திக் கொள்ள மசோதா ஒன்றை பாகிஸ்தான் செனட் அவை சமீபத்தில் நிறைவேற்றியது.
இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியை திருநங்கை ஒருவர் முதல் முறையாக தொகுத்து வழங்கியுள்ளார். செய்தியை தொகுத்து வழங்கிய திருநங்கையின் பெயர் மாவியா மாலிக். இவர் கொஹெனூர் செய்திகள் என்கிற தனியார் தொலைக்காட்சியில் செய்திகளை வாசித்துள்ளார்.
#Pakistan first transgender news caster on screen now - Maavia Malik pic.twitter.com/uXJipyrEfL
— Shiraz Hassan (@ShirazHassan) March 23, 2018
இதனிடைய முதன் முறையாக செய்தியை தொகுத்து வழங்கிய மாவியா மாலிக்கிற்கு ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவிப்பதோடு மனதார பாராட்டியும் வருகின்றனர்.
Wahh...that's really nice and impressive.
— Netra Parikh (@Netra) March 24, 2018
Good to see we are finally making some progress.
— Naheel (@sarcasticnaheel) March 24, 2018
Hopeful that others will also follow these foot prints and gives transgenders proportionate representation
— Muhammad Zuhair Ammar (@Zuhair_PTI) March 24, 2018