கான்பூர் IIT மாணவர் மர்மமான முறையில் மரணம்!

கான்பூர் IIT மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்!

Last Updated : Apr 19, 2018, 11:39 AM IST
கான்பூர் IIT மாணவர் மர்மமான முறையில் மரணம்! title=

கான்பூர்: கான்பூர் IIT மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்!

கான்பூர் IIT-ல் பயின்று வரும் மாணவர் பீம் சிங், முனைவர் படிப்பில் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் அவர் நேற்று தனது விடுதி அறையில் உள்ள விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறை மூத்த அதிகாரி அகிலேஷ் குமார் தெரிவிக்கையில், பலியான மாணவர் பரிஷாபாத் பகுதியை சேர்ந்தவர் எனவும், IIT கேம்பஸில் பயின்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவரது மரணம் குறித்து மர்மம் தொடர்ந்து வரும் நிலையில் அவரது தந்தை, பீம் சிங் பல நாட்களாக தீராத துயரத்தில் பாதிக்கப்பட்டு வந்ததாகவும், இந்த மன அழுத்தத்தின் காரணமாகவே அவர் தற்கொலை செய்துக்கொண்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

காவல்துறை தரப்பில் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் 13-ஆம் நாள் டெல்லி IIT மாணவர் கோபால் மாலோ அவரது விடுதி அரையில் இருக்கும் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 

IIT மாணவர்களிடம் தொடர்ந்து வரும் தற்கொலை விவாகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது.

Trending News