"இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்துக்கு ஏ சான்றிதழ்

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வைரலானது.

Last Updated : Mar 21, 2018, 03:20 PM IST
"இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்துக்கு ஏ சான்றிதழ் title=

சந்தோஷ் பி.ஜெயக்குமார் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, `கஜினிகாந்த்' உள்ளிட்ட படங்களை தற்போது இயக்கி வருகிறார். இந்த இரு படங்களையும் ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 

கவுதம் கார்த்திக் நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வைபவி ஷாண்டில்யா, யாஷிகா என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாலமுரளி பாலா இசையமைக்கிறார். தருண் பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். 

ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வைரலானது மேலும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகரித்து. இந்நிலையில் தற்போது டிவிட்டரில் டிரென்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’  படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இந்த படம் இருக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

 

Trending News