சிங்கப்பூரில் வசிக்கும் 13 இந்தியர்களுக்கு ஜிகா வைஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரின் அல்ஜூனைத் கிரெசன்ட் பகுதியில், வசித்து வரும் வெளிநாட்டு கட்டுமான தொழிலாளர்கள் 41 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜிகா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்நிலையில் சிங்கப்பூரில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் தொடர்ந்து அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் டாக்டர்கள் தொடர்ந்து அவரது உடல் நிலையை கவனித்து வருவது மட்டுமல்லாமல் கருவில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சியையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் கர்ப்பிணி பெண்கள் சிங்கப்பூருக்கு செல்ல வேண்டாம் என்று மற்ற நாடுகள் அறிவித்துள்ளது.
மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில்:- சிங்கப்பூரில், 13 இந்தியர்கள் ஜிகா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் மத்திய அரசுக்கு செய்தி அனுப்பியுள்ளது என்று கூறினார்.