Covid Toe: கோவிட் டோ என்றால் என்ன? வந்தால் சிகிச்சை என்ன?

எச்சரிக்கை! கோவிட் டோ நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? விவரம் தெரிந்துக் கொள்ளுங்கள்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 6, 2021, 03:42 PM IST
  • கோவிட் பாதிப்பின் அடுத்த அறிகுறி
  • கோவிட் டோ
  • யாருக்கு வரும் கோவிட் டோ?
Covid Toe: கோவிட் டோ என்றால் என்ன? வந்தால் சிகிச்சை என்ன? title=

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பலர், வீங்கிய கால்கள் போன்ற இரண்டாம் நிலை அறிகுறிகளையும் காட்டினார்கள். இது கோவிட் டோ (Covid toe)  என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகைய அறிகுறிகள் ஏன் ஏற்படுகின்றன என்பதை விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். கோவிட் தொற்று பாதிப்பு ஏற்படுவது மிகவும் வருத்தமான விஷயம். கொரோனா பாதித்த சிலரின் கால் மற்றும் விரல்களில் புண்கள் இருப்பதாக கூறுகின்றனர். 

இதற்கு முன்னதாக, கோவிட் பாதித்தவர்களுக்கு காது கேட்பதில் மந்தம் மற்றும் அதிகமாக முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டன. அதன் பிறகுதான், ஆரோக்கிய சேது செயலியிலும் (Aarogya setu Ap) செயலியிலும் காது கேட்பதிலும் பிரச்சனை இருக்கிறதா என்ற கேள்வி சேர்க்கப்பட்டது.

கொரோனா பாதித்த சிலரின் கால் மற்றும் விரல்களில் புண்கள் இருந்தாலும் அதில் சிலருக்கு வலி ஏதும் இருப்பதில்ல. பலருக்கு வலி மற்றும் அரிப்பு இருக்கிறது. இந்த கொரோனா அறிகுறியை கோவிட் டோ என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர்.  

விஞ்ஞானிகள் இப்போது கோவிட் நோய்த்தொற்றுடன் தொடர்புடைய இந்த பக்க விளைவு குறித்து விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகள் பல்வேறு விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளன. கோவிட் டோ என்பது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியுடன் தொடர்புடையது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

கோவிட் தொற்றுநோயை எதிர்கொள்ள நமது உடல், கொரோனா வைரஸை எதிர்க்கிறது. இந்த போராட்டத்தில் ஏற்படும் பக்கவிளைவுகள் சிலருக்கு புண்ணாக வெளிப்படுகிறது.   நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் இரண்டு கூறுகள் இந்த புண்கள் உருவாக வழிவகுக்கிறது.

Also Read | கொரோனாவால் பாதிக்கப்படும் வாசனை உணர் திறனை விட்டமின் A மீட்டெடுக்குமா..!!

ஒன்று டைப் 1 இன்டர்ஃபெரான் (type 1 interferon), எனப்படும் ஆன்டிவைரல் புரதம் (antiviral protein). இந்த ஆண்டிவைரல் புரதம், கோவிட் தொற்றுக்கு எதிராக செயல்படுகிறது. இரண்டாவதாக, ஒருவரின் சொந்த செல்கள் மற்றும் திசுக்களைத் தவறாகத் தாக்கும் ஒரு வகை ஆன்டிபாடியினாலும் கோவிட் பாதித்தவர்களுக்கு புண்கள் ஏற்படுகின்றன.

கோவிட் நோயால் ஏற்படும் கால்விரல் புண்கள் மற்றும் வீக்கத்தினால் அவதிப்படும் மக்களுக்கு, அவர்களின் கால் தோல் சிவப்பு அல்லது ஊதா நிறமாக இருப்பதைக் காணலாம். இது புடைப்புகளாகவும் வீங்கி அதிக வலியைக் கொடுக்கலாம்.

கோவிட் டோ என்ற இந்த ஆராய்ச்சியை பாரிஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். இதற்காக, கோவிட் கால் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட 50 பேரை அவர்கள் பரிசோதித்தனர். 2020ஆம் ஆண்டிலேயே இந்த ஆராய்ச்சியும் நோயாளிகளின் பரிசோதனையும் தொடங்கிவிட்டது. இதே போன்ற சில்ப்லைன் புண்கள் (chilblains lesions) உள்ள பதிமூன்று நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டனர் ஆனால் இந்த நோய்த்தொற்றுகள் கோவிட் ஏற்பட்ட்தால் ஏற்படவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கோவிட் டோ பற்றிய ஆய்வு தொடர்பான பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் டெர்மட்டாலஜி (British Journal of Dermatology) என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

Read Also | வெரிகோஸ் வெயின் பாதிப்பா? கவலை வேண்டாம்! இதோ நிவாரணம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News