இந்தியாவின் தினசரி பதிவாகும் புதிய COVID-19 தொற்றுகள் 4,00,000 என்ற அளவில் இருந்து சற்றே குறைந்துள்ளது. திங்கள்கிழமை (மே 10) அன்று பதிவான தினசரி இறப்பு எண்ணிக்கையும் 4,000 என்ற அளவில் இருந்து குறைந்துள்ளது.
உத்திர பிரதேச மாநிலத்தை இதர மாநிலங்களை ஒப்பிடும் போது அதிக அளவில் தொற்று பரவல் மிகவும் அதிகம் இல்லை என்றாலும், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 26,000 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகியுள்ளது. மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,80,315 ஆக அதிகரித்துயுள்ளது. இதுவரை, இந்த தொற்றினால், மாநிலத்தில் 15,170 பேர் இறந்து விட்டனர்.
உத்திர பிரதேசம், தனது மாநிலத்திற்கான ஆக்ஸிஜன் தேவைக்கு பிற மாநிலங்களை சார்ந்துள்ள நிலையில், வெளியிலிருந்து வரும் ஆக்ஸிஜன் சப்ளையை சார்ந்திருக்காமல், மாநிலத்தில் ஆக்ஸிஜன் தேவையை நிறைவு செய்ய ஆக்ஸிஜன் ஆலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தில் சுமார் 300 ஆக்சிஜன் ஆலைகளை அமைக்கும் பணிகள் நடந்து வருவதை அவர் உறுதிப்படுத்தினார்.
ஊடகங்களுடன் பேசிய யோகி ஆதித்யநாத், “இரண்டாவது கொரோனா அலை, ஒரு புதிய சவாலாக இருந்தது. ஆக்ஸிஜனுக்கான தேவை திடீரென அதிகரித்தது. ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’, இந்திய விமானப்படையின் பெரிய விமானங்களில் டேங்கர்கள் ஆகியவற்றின் மூலம் ஆக்ஸிஜன் அனுப்பி மத்திய அரசு வழங்கியுள்ளதாவும் அவர் உறுதிப்படுத்தினார்.
ALSO READ | கொரோனா காலத்தில் நோய் எதிப்பு சக்தியை அள்ளிக் கொடுக்கும் கற்றாழை, வேம்பு!
இரண்டாவது கொரோனா அலை சாவாலக இருந்த நிலையில், மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க சிறப்பு ரயில்களை இயக்கி உதவிய மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு (PM Narendra Modi) உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நன்றி தெரிவித்தார்.
இரண்டாவது கொரோனா அலை சாவாலக இருந்த நிலையில், மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க சிறப்பு ரயில்களை இயக்கி உதவிய மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு (PM Narendra Modi) உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நன்றி தெரிவித்தார்.
ALSO READ | சற்றே வேகம் குறையும் கொரோனா: இன்று (மே,10) 3,66,161 பேருக்கு கொரோனா பாதிப்பு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR