ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளை குணப்படுத்த நெல்லிக்காய் பயன்படுகிறது என்றால், நெல்லியின் சத்துக்களைக் கொண்டுள்ள அருநெல்லியும் சற்றும் குறைந்ததல்ல.
உடலில் உள்ள நச்சுக்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், ரத்தத்தையும் சுத்தம் செய்யும் அருநெல்லிக்காய். ஹீமோகுளொபின் உருவாக்கத்திற்கு அருமருந்தாய் செயல்படுகிறது அருநெல்லி.
சுலபமாக கிடைப்பதால் அருநெல்லி என்ற அற்புத கனியின் (Healthy food) அருமை பெருமை தெரிவதில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நெல்லிக்காயின் அருமை தெரிந்தவர்களும் அருநெல்லியை தவற விடுவது வருத்தமான ஒன்று.
மேலும் படிக்க | காலையில் எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
விட்டமின் சி, பி1, பி2, பி3 போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ள அருநெல்லியில் கால்சியம், இரும்புசத்து, பாஸ்பரஸ், சாம்பல் சத்து என ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. அதுமட்டுமா? புரதச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்து, கரோடின்கள் ஆகியவையும் அருநெல்லியில் உள்ளன.
அருநெல்லியின் மருத்துவப் பண்புகள்
அருநெல்லியில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உணவினை நன்கு செரிக்க உதவுகின்றன. மலமிளக்கியாக செயல்படும் அருநெல்லி, மலச்சிக்கல், மூலநோய் உள்ளிட்ட நோய்களுக்கு (Medicinal Benefits) அருமருந்தாகிறது.
அருநெல்லிக் காயில் உள்ள விட்டமின் சி, உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்கக்கூடியது. சளி, இருமல் உள்ளிட்ட நோய் தொற்றுகளிலிருந்து நம்மை இக்காய் பாதுகாக்கிறது.
மேலும் படிக்க | தினம் ஒரு வெள்ளிரிக்காய் போதும்; புற்று நோயும் அஞ்சி ஓடும்
சரும பாதுகாப்பிற்கு அற்புதமான பலன்களை கொடுக்கக்கூடிய அருநெல்லியில் உள்ள விட்டமின் சி சருமத்தை மிருதுவாகவும், பொலிவாகவும் பராமரிக்க உதவுகிறது. உடல் பருமனை குறைக்க விரும்புபவர்களுக்கு அருநெல்லியின் இலைகள் ஏற்றவை.
இதில், உள்ள நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட், பிளவனாய்டுகள், சபோனின், டானின்கள், பாலிபீனால்கள், புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை உடல் அதிகமான கொலஸ்ட்ராலை உறிஞ்சுவதைத் தடைசெய்து உடல் எடையை குறைக்கிறது.
இரும்புச்சத்தை அதிக அளவில் கொண்டுள்ள அருநெல்லியை தொடர்ந்து சாப்பிட்டால், ரத்தசோகை ஏற்படாமல் தவிர்க்கலாம்.
உணவு செரிமானமாவதற்கும், உணவில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்தை உடலுக்கு எடுத்துச் செல்வதிலும் பித்தநீர் அத்தியாவசிய காரணியாக செயல்படுகிறது. பித்தப்பை ஆரோக்கியமாக இருந்தால் பித்தப்பை கற்களை கரைக்கலாம். மேலும் பித்தப்பையில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். பித்தத்தை சமனாக்கும் தன்மையைக் கொண்டுள்ளது அருநெல்லிக்காய்.
மேலும் படிக்க | பச்சை கொத்தமல்லியில் இவ்வளவு மருத்துவ குணங்களா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR