கோவிட் நோய் (COVID-19) பாதித்து அதிலிருந்து மீண்டாலும் பிரச்சனைகள் முடிவதில்லை என்பது கவலைக்குரிய விஷயம். பாதிப்பின் அளவை பொறுத்து சில நாட்கள் முதல் பல வாரங்கள் வரை கோவிட் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோவிட் நோய் குணமான பிறகும் பாதிக்கப்பட்டவர்கள் சில சுகாதார பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ஆரோக்கியமானவர்கள், இளம் வயதினர் கூட நோய்த்தொற்று பாதித்து குணமான பிறகு சில மாதங்கள் வரை உடல் நலக் குறைவை எதிர்கொள்கின்றனர். இது கவலைகளை அதிகரித்துள்ளது.
ஞாபக மறதி, மனச்சோர்வு, பதட்டம், சோர்வு, மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம், இருமல், மூட்டு வலி, நெஞ்சு வலி, செரிமாணக் கோளாறு, தூக்கம் வராமல் போவது, தலைவலி, இதய துடிப்பு அதிகரிப்பது, நிற்கும்போது தலைச்சுற்றுவது என பலவிதமான பிரச்சனைகளை சில நாட்கள் வரை எதிர்கொள்ள நேரிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது கோவிட் பாதித்து, குணமடைந்தவர்களிடம் இருந்து தெரிய வந்த தகவல்.
ALSO READ: New COVID Vaccine: இந்தியாவில் மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லாவுக்கு அனுமதி
கோவிட் நோயின் நீண்ட கால தாக்கம் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஏனெனில், 2020ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தான் கொரோனா பாதிப்பு உலக அளவில் அறியப்பட்டுள்ளது. COVID-19 பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் உடல் உறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
COVID-19 நுரையீரலைப் பாதிக்கும் ஒரு நோயாகக் இருந்தாலும், இது பல உறுப்புகளையும் சேதப்படுத்தும். இந்த உறுப்பு சேதம் நீண்டகால சுகாதார பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். COVID-19 இலிருந்து குணமான சில மாதங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இமேஜிங் சோதனைகள் இதய தசையில் நீடித்த சேதத்தைக் காட்டியுள்ளன, லேசான COVID-19 அறிகுறிகள் கொண்டிருந்தவர்களின் மருத்துவ பரிசோதனையும் இப்படித்தான் இருக்கிறது.
கோவிட்டில் இருந்து குணமானவர்களுக்கு இதய சிக்கல்களின் அபாயம் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. COVID-19 உடன் பெரும்பாலும் தொடர்புடைய நிமோனியா, நுரையீரலில் உள்ள சிறிய காற்றுப் பைகளுக்கு (alveoli) நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக நீண்ட கால சுவாச பிரச்சினைகள் ஏற்படலாம்.
Also Read | Delta plus variant: உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க 5 வழிகள்
மூளையில் (Brain) கோவிட் ஏற்படுத்தும் பாதிப்பால் பக்கவாதம், வலிப்பு நோய், பார்கின்சன் நோய் (Parkinson's disease), அல்சைமர் நோய் (Alzheimer's disease) ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் COVID-19 பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு multisystem inflammatory syndrome என்ற சிக்கலையும் எதிர்கொள்கின்றனர். இதனால் உடலின் சில உறுப்புகள் மற்றும் திசுக்கள் கடுமையாக வீக்கமடைகின்றன.
COVID-19 இன் கடுமையான அறிகுறிகளைக் கொண்டவர்கள் பெரும்பாலும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றிருப்பார்கள். வென்டிலேட்டர்கள் மூலம் உயிர் பிழைத்திருப்பார்கள். கொரோனாவில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள், நோய்க்கு பிந்தைய மனஉளைச்சல், மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றை எதிர்க்கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதை மறுக்க முடியாது.
பல பெரிய மருத்துவ மையங்கள் COVID-19 இலிருந்து மீண்ட பிறகு தொடர்ச்சியான அறிகுறிகள் அல்லது தொடர்புடைய நோய்களைக் கொண்டவர்களுக்கு பராமரிப்பு அளிக்க சிறப்பு கிளினிக்குகளைத் திறக்கின்றன.
ALSO READ: TN Delta Plus Corona: தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9ஆக உயர்வு
COVID-19 பாதித்தவர்களில் பெரும்பாலானோர் விரைவாக குணமடைவார்கள். ஆனால் COVID-19 ஏற்படுத்தும் நீண்டகால தாக்கத்தின் சிக்கல்கள் குறித்து அறிந்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது நல்லது.
வரும் முன் காப்பதே மிகவும் நல்லது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கூட்டத்தைத் தவிர்ப்பது, தடுப்பூசி போட்டுக் கொள்வது, கைகளை சுத்தமாக வைத்திருப்பது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் மேற்கொள்வது காலத்தின் கட்டாயம்...
ALSO READ: டெல்டா ப்ளஸ் வைரஸ், தடுப்பூசி செயல்திறனை குறைக்குமா; அரசு கூறுவது என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR