Menopause Tips For Women: பெண்களின் சினைப்பையில் உள்ள கருமுட்டைகள் முடியும்போது மாதவிடாய் முற்றிலுமாக நின்றுவிடும். இது, மெனோபாஸ் என்று அழைக்கப்படுகிறது. பெண்களின் உடலில் பல மாறுதல்களை ஏற்படுத்தும் மாதவிடாய் நின்றுபோகும் கட்டத்தில், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்கள் சுரப்பில் ஏற்படும் மாற்றத்தால், ஆரோக்கியத்தில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படும்.
மெனோபாஸ் என்பது வாழ்க்கையின் இயல்பான நிலை. அறுவை சிகிச்சை அல்லது கீமோதெரபி இந்த சிகிச்சைகள் கொண்ட சிலருக்கு, இயல்பாக மாதவிடாய் நிற்பதற்கு முன்னதாகவே மாதவிடாய் நின்றுவிடுகிறது.
பொதுவாக, மெனோபாஸ் 45 முதல் 55 வயதிற்குள் ஏற்படுவது இயல்பானது, இயற்கையானது. பொதுவாக, மாதவிடாய் நிற்பதற்கு முன் மற்றும் பின்னர் என சுமார் 7 ஆண்டுகள் இந்த மொனோபாஸ் நிலை நீடிக்கும், ஆனால் இது 14 ஆண்டுகள் வரை தொடரலாம் என ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.
ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் உள்ளிட்ட ஹார்மோன் அளவுகள் மாறி, உடலின் வெப்பநிலைக் கட்டுப்பாட்டைப் பாதிக்கும் என்பதால், மாதவிடாய் நிறுத்தத்திற்கு முன்னும் பின்னும் இரவு நேரத்தில் அதிகமாக வியர்வை சுரக்கிறது.
மேலும் படிக்க | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!
இந்த ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் மற்ற ஹார்மோன்களின் செயல்பாட்டை பாதிக்கின்றன. இது உடலில் திடீரென வெப்பம் கூடுவது, திடீரென வியர்த்துக் கொட்டுவது உட்பட பல அசெளரியங்களை ஏற்படுத்தும்.
சிகிச்சை மற்றும் தடுப்பு
சில பெண்கள் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைக்கு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே சிறந்தது. ஆனால் இந்த உடல் மாற்றத்தை நிர்வகிக்க வாழ்க்கை முறை மாற்றங்கள் நல்ல பயனளிக்கும்.
மது அருந்துதல்
மது அருந்துதலை தவிர்ப்பது நல்லது. அதேபோல, காரமான உணவுகள், காஃபின் கல்ந்த உணவுகளை தவிர்ப்பது, புகைபிடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
அமைதியாக இருப்பது, லேசான ஆடைகளை அணிவது ஆகியவை நிலைமையை சமாளிக்க உதவும். காற்றோட்டமான இடத்தில் உறங்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.
மேலும் படிக்க | Constipation: கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்
மணிக்கட்டுகளில் குளிர்ந்த நீரால் கழுவவும்
நமது மணிக்கட்டில் பல இரத்த நாளங்கள் உள்ளன, அதில், தண்ணீரை விடுவதால், உடல் சூடானால், உடனடியாக சூட்டை சமப்படுத்த மணிக்கட்டில் நீரை விடவும். அதிக எடை அல்லது பருமனாக இருந்தால் உடல் திடீரென சூடாவதும், வியர்ப்பதும் அதிகமாகும்.
அதேபோல, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மூலம் ஆரோக்கியமான எடையை பராமரிப்பது நல்லது. மன அழுத்தத்தைக் குறைத்து ஓய்வெடுக்கவும். மெதுவான மற்றும் ஆழமான சுவாசம் மற்றும் தியானம் ஆகியவை மன அழுத்தத்தைக் குறைக்கவும், ஹாட் ஃப்ளாஷ்களைக் குறைக்கவும் உதவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Heart Attack Risk: இளம் வயதினருக்கு வரும் மாரடைப்பு..! தடுக்க சில வழிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ