வெள்ளை முடி சிகிச்சை: வெள்ளை முடி பிரச்சனை இப்போதெல்லாம் சாதாரணமாகி வருகிறது. பெரும்பாலான மக்கள் இதை சமாளிக்க பல வகையான முயற்சிகளை செய்கிறார்கள். சிலர் விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள், சிலர் முடிக்கு நிறம் பூசிகிறார்கள்.
சிலரோ ஒன்றிரண்டு முடி வெளுத்திருந்தால் அவற்றை பிடுங்கிவிடுகிறார்கள். நீங்களும் அப்படி செய்பவராக இருந்தால், உங்களது இந்த செயல், உங்கள் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக, அதை அதிகரிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படி செய்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
வெள்ளை முடியை பிடுங்குவதால் ஏற்படும் தீமைகள்
வெள்ளை முடியை பிடுங்குவதால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.
- வெள்ளை முடியை வேரோடு பிடுங்குவதால், உங்கள் தலைமுடியின் வேர்களில் மோசமான விளைவு ஏற்படுகிறது.
- அகற்றப்பட்ட வெள்ளை முடிக்கு பதிலாக, புதிய முடி வளர்வது சில சமயம் நடக்காமல் போகலாம்.
- உங்கள் முடி அடர்த்தி குறைந்து மெல்லியதாக மாறும்.
- அதாவது, வெள்ளையான முடியை பிடுங்குவது சரியான தீர்வாகாது.
- இப்படி செய்வதால், தலையில் சில இடங்களில் முடியில் வழுக்கை அல்லது திட்டுகள் ஏற்படலாம்.
மேலும் படிக்க | High cholesterol இருந்தால் என்ன ஆகும்; அறிகுறிகள் மற்றும் காரணங்கள்
இந்த பொருட்கள் வெள்ளை முடியை கருப்பாக மாற்றும்
- நெல்லிக்காய் மற்றும் வெந்தய விதைகள்
- பிளாக் டீ
- பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு
- மருதாணி மற்றும் காபி
- கறிவேப்பிலை மற்றும் எண்ணெய்
- ஆளி விதை எண்ணெய்
இந்த காரணங்களால் முடி வெள்ளையாகிறது
- மோசமான வாழ்க்கை முறை
- தண்ணீரை மாற்றுதல்
- மன அழுத்தம்
- முடியில் அதிக ரசாயனங்களை பயன்படுத்துவது
- முதுமை
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தலவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Health Care Tips: இரவில் சாதம் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR